தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக விளங்குபவர் தான் நடிகர் அஜித்! எந்த ஒரு பெரிய சினிமா பின்னணியும் இல்லாமல் கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நடிப்பாலும் குணத்தாலும் மக்கள் மேல் காட்டிய அன்பாலும் பெற்றவர் தான் அஜித்குமார் என்றால் அது மிகையாகாது! நடிப்பதை தாண்டி இவர் நல்ல உள்ளம் கொண்டவராகவே மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்!
இவர் சமீபத்தில் கூட பைக் வைத்து உலக நாடுகளை சுற்றி பார்த்தார்! அவ்வப்போது அங்குள்ள ரசிகர்களையும் பார்த்து அவர்களோடு அன்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டதும் மக்கள் அறிந்ததே!
இவர் சமீபத்தில் நடித்துள்ள படம் தான் வலிமை! வரும் 2022 பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது!
இது மட்டும் இல்லாமல் இவரது படம் வெளியாக இவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிலையில் அடுத்தும் பாடலின் ப்ரோமோ வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது! இந்நிலையில் நடிகர் அஜித்தை தல என் மக்கள் செல்லமாக அழைப்பது உண்டு! ஆனால், இனிமேல் என்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என அவர் அறிக்கை விட்டுள்ளார்!
இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை வர ழைத்துள்ளது! இந்நிலையில் வலிமை படத்தின் இரண்டாவது பாடல் தாய்மையை போற்றும் விதமாக உள்ள “MOTHER SONG” என்னும் பாடல் வெளியாகிவிட்டது! மக்களிடம் அமோக வரவேற்பை இந்த பாடல் பெற்ற நிலையில், வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது! இப்பொழுது வலிமை படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்