Tamil Tips
அறுவைசிகிச்சை பிரசவம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பிரசவ வலி மற்றும் பிரசவம் பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன் பெற்றோர்

தாய்மார்களுக்கு வருகின்ற போஸ்ட்பார்டம் மனச்சோர்வு… தீர்க்க வழிகள்…

பெரும்பாலான தாய்மார்களுக்கு வரக்கூடிய போஸ்ட்பார்டம் மனச்சோர்வை சமாளிப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால், அதை நீங்கள் புரிந்து கொண்டால் எளிதில் இந்த மனச்சோர்வை கடந்து செல்லலாம். தாய்மையைக் கடக்கும் பல பெண்கள் இதில் சிக்குவார்கள். அறிந்து, தெளிந்தால் மிக சுலபம். எப்படி இதிலிருந்து மீள்வது எனப் பார்க்கலாம்.

களங்கம், நம்பிக்கையின்மை, யாரும் சரியாகத் தனக்கு துணையாக நின்று உதவவில்லை என்ற நினைப்பு இதெல்லாம் போஸ்ட்பார்டம் மனச்சோர்வில்தான் வரும். இது வெறும் நினைப்பு என்று சொல்லிவிட முடியாது. பல வீடுகளில் நிகழத்தான் செய்கிறது.

மனச்சோர்வில் நீங்கள் இருக்கிறீர்களா என எப்படி கண்டுபிடிப்பது?

குழந்தைகள் தொடர்பான தேவையற்ற பயம் வருவது.

சோகம்

குற்ற உணர்ச்சி

Thirukkural

மகிழ்ச்சியை இழந்துவிட்டது போல ஒரு உணர்வு

சிரிப்பில் கவனம் செல்லாமல் இருத்தல்

அன்றாட வேலைகளை செய்வதிலே தடுமாற்றம்.

நல்ல தாய் இல்லையோ என்ற எண்ணம் வருவது

தூக்கம் கெடுவதால் ஏற்படும் மனச்சோர்வு

கணவர், மற்றவர்கள் மீது கோபம், எரிச்சல்.

தற்கொலை எண்ணம் வருவது

உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ள நினைப்பது

உணவுப் பழக்கத்தில் மாற்றம்

எப்போதுமே கோபம், எரிச்சல் உணர்வு

எப்படி மனச்சோர்வை விரட்டலாம்?

postpartum depression

Image Source :  Circle of moms

தனக்கான நேரம் ஒதுக்குதல்

‘மீ டைம்’ என்பார்கள். தனக்கான நேரத்தை ஒதுக்கி கொள்ளுதல் நல்லது.

குழந்தை, குழந்தை பராமரிப்பு, தாய்ப்பால் தருவது என்றே இல்லாமல், உங்கள் முகத்தை கண்ணாடியில் கொஞ்சம் பாருங்கள்.

உங்களுக்கு தேவையானதையும் செய்து கொள்ளுங்கள்.

வீட்டு பெரியவர்களை 2 மணி நேரமாவது குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லுங்கள்.

வாரம் ஒருமுறையாவது ‘மீ டைம்’ எடுத்துக்கொள்ளுங்கள்.

வாக்கிங், தூங்குவது, யோகா, தியானம், ஹோட்டலுக்கு செல்வது போன்ற ஏதாவது ஒன்றை செய்யுங்கள்.

உடற்பயிற்சி – உங்களால் முடிந்தது

தினமும் 10 நிமிடம் சிம்பிளான உடற்பயிற்சிகளை செய்தால் மனச்சோர்விலிருந்து வெளி வரலாம் என ஆய்வுகள் சொல்கின்றன.

இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான முடி உதிர்தலைத் தடுக்கும் 4 வகை புரோட்டீன் ஹேர் பேக்

ஓய்வு

குழந்தை தூங்கும் போது நீங்களும் தூங்குங்கள்.

ரெஸ்ட் மிக மிக முக்கியம்.

நடு ராத்திரியில் விழித்து தாய்ப்பால் கொடுப்பதால், தூக்கம் கெட்டு போகும். மனநிலை மோசமாக இருக்கும்.

பகலில் அவ்வப்போது தூங்கி அதை ஈடு செய்யுங்கள்.

பம்பிங் பாட்டிலில் தாய்ப்பால் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். ஒரு நாள் உங்களது கணவரை எழுந்து, தாய்ப்பால் சேமித்து வைத்ததைக் கொடுக்க சொல்லலாம்.

ஹெல்தி உணவுகள்

உணவுகள் மிக மிக முக்கியம்.

சுவையும் சத்துகளும் கட்டாயம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

ஃப்ரெஷ், காய்கறி, பழங்கள், பயறு, பருப்பு ஆகியவற்றை சாப்பிடுங்கள்.

பிடித்தமான ஆரோக்கிய உணவுகள் உங்களின் மனநிலையை மாற்றும்.

மீன்

மீன் உணவுகளில் ஒமேகா 3 சத்துகள் உள்ளதால், DHA சத்துகள் கிடைக்கும். உடலில் DHA சத்து குறைந்தால் அதிக அளவு மனச்சோர்வு வரும்.

அதை ஈடுகட்ட மீன்களை சாப்பிடுங்கள்.

குழந்தை பிறந்து 4-வது மாதம்

தாய்மார்கள் அதிக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்.

வெறுப்பான சூழ்நிலை வரலாம்.

அதைப் போக்க நல்ல உறவுகளை அருகிலே வைத்துக் கொள்ளுங்கள்.

கணவரின் அன்பு இந்த மாதத்தில் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்தால் நல்லதுதானே.

தனிமை தவிர்

தனிமையைத் தவிர்க்கவும்.

தூங்கும் நேரம் தவிர தனிமையில் இருக்க வேண்டாம்.

தேவையில்லாத சிந்தனை, குழப்பம் ஆகியவை வரும்.

ஏதோ வெறுப்பு, சொல்ல முடியாத கோபம், எரிச்சல் மனநிலை இருக்கும் என்பதால் தனிமையாக இருக்க வேண்டாம்.

இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்…

depression after delivery

Image Source : Parade

இதையும் படிக்க: தாய்மார்களுக்கான ஸ்ட்ரெஸ்… விரட்ட சிம்பிள் வழிகள் இங்கே…

நகைச்சுவை நல்ல மருந்து

நகைச்சுவை படங்கள், வீடியோ ஆகியவைப் பார்க்கலாம்.

பெட்ஸ் வீடியோ, குழந்தைகள் வீடியோ ஆகியவை நல்ல மனநிலையைத் தரும்.

மியூசிக் தெரபி

இசைக் கருவிகளின் ஓசை மனதை மென்மையாக்கும்.

மிதமான மெடிடேஷன் இசையை அடிக்கடி கேளுங்கள்.

நறுமண எண்ணெய்

வீட்டில் லாவண்டர், லெமன் கிராஸ் போன்ற நல்ல நறுமணங்களைத் தெளித்து வைக்கலாம்.

இது உங்களின் மனநிலையை மாற்றும்.

இதையும் படிக்க: மீண்டும் அழகான கட்டுடல் சாத்தியமே… 5 ஈஸியான கார்டியோ பயிற்சிகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகள், பெண்களுக்கு சத்துகளை அள்ளித் தரும் பாரம்பர்ய உணவான களி ரெசிபி

tamiltips

பிறந்த குழந்தையின் தலை உருண்டை வடிவம் பெற சில குறிப்புகள்

tamiltips

கர்ப்பக்காலத்தில் கட்டாயமாக சாப்பிட கூடாத 13 வகை உணவுகள்

tamiltips

8+ மாத குழந்தைகளுக்கான 5 வகை பாயாசம் ரெசிபி

tamiltips

பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன? பிரசவ வலியை சமாளிப்பது எப்படி?

tamiltips

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

tamiltips