கிட்டத்தட்ட கடந்த 30 நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதலினால் உலகத்தின் பல்வேறு நாட்டு மக்கள் ஊரடங்கில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பதால் பெண்களுக்கு வழக்கம்போல ஏற்படவேண்டிய மாதவிடாய் தள்ளிப்போவதும், அதிக வலியுடன் ஏற்படுவதுமாக அமைந்திருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதாவது ஊரடங்கு காரணமாக பெண்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர். அவர்கள் நாள்தோறும் கடுமையாக வேலை செய்து வருவதால் மன அழுத்தம் அதிகமாகிறது. வழக்கமான காலத்தில் வேலை செய்கின்ற போது மன அழுத்தத்தை குறைப்பதற்கு பிற வேலைகளில் கவனம் செலுத்துவர். ஆனால் அதையும் தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் செய்ய இயலவில்லை.
இதனால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தூக்கமின்மை மற்றும் அதிக வேலை பளு ஆகியவற்றினால் அவர்களுடைய உடல்நிலை மோசமாகி வருகிறது. உடலில் வழக்கம்போல சுரக்க வேண்டிய ஹார்மோன்கள் சரியாக சுரக்காத காரணத்தினால், அவர்களுடைய மாதவிடாய் தள்ளிப்போகிறது. தள்ளிப் போவது மட்டுமின்றி மாதவிடாய் ஏற்படும் போது மிகுந்த வலி ஏற்படுகிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன.
வழக்கமான மாதவிடாய் நடைபெற வேண்டிய நாள் இல்லாமல், 7 அல்லது 8 நாட்கள் கழித்தே மாதவிடாய் ஏற்படுகிறது என்று பல பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவரீதியில் இந்த மாதவிடாய் சுழற்சி சரிவர நடக்காததற்கு பெயர் “ஓலிகோமெர்ரியா” என்று கூறப்படுகிறது.
இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், ஊரடங்குக்கு முன்னால் எவ்வாறு மன அழுத்தமின்றி இருந்தனரோ, அவ்வாறு தற்போதும் இருக்க வேண்டும். அவ்வாறு மன அழுத்தத்தை குறைத்தால் மட்டுமே இந்த பாதிப்பிலிருந்து பெண்களால் விரைவாக வெளியே வரமுடியும் என்று மருத்துவ ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
இந்த செய்தியானது பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.