Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஆயுர்வேதத்தின் மூலம் உங்கள் உடல்நலத்தை சமநிலையில் வைத்திருங்கள்!

ஆனால், நம் மூத்த தலைமுறையில் இந்த மூன்றும் மிக முக்கியமானவை. `வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம்’ எனும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. இவற்றைக் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.  ஒவ்வொரு நபரும் ஒரு சில கூறுகளால்  அவர்களின் இயல்பான அமைப்பின் காரணமாக பாதிக்கப் படுகின்றனர்.

வாதம் – காற்று மற்றும் விண்வெளி கூறுகள் ஆதிக்கம் செலுத்து கின்றன

பித்தம்  – நெருப்புக் கூறு  ஆதிக்கம் செலுத்துகிறது

கபம்  – பூமி மற்றும் நீர் கூறுகள்  ஆதிக்கம் செலுத்துகின்றன

ஒருவரின் உடலின் வடிவத்தையும், உடல் போக்குகளையும் (உணவு விருப்பத்தேர்வுகள் மற்றும் செரிமானம் போன்றவை) மற்றும் ஒருவரின் மனதையும் உணர்ச்சியையும் பாதிக்கிறது. உதாரணமாக, கபம்  உள்ள மக்களில் பூமிக்கூறு திடமான உறுதியான உடல் வகை, மெதுவாக செரிமானம், சிறந்த  நினைவுத்திறன் , மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மை ஆகியவற்றில் வெளிப்படையாகத் தெரிகிறது. 

Thirukkural

வாதம், பித்தம், கபம் ஆகியவை தங்களின் உகந்த அளவில் செயல்படாத நிலையில், சமநிலையின்மை   தகுந்தபடி அறிகுறிகளால் குறிக்கப்படுகிறது.

வாத சமநிலையின்மை:

முதலாவதாக, வாதம்  நீண்ட காலத்திற்கு போதிய அளவு சமநிலையற்று இருந்தால் (பித்தம் மற்றும் கபம் ) சமநிலையற்றதாக மாறலாம். வாதம்  காற்று மற்றும் விண்வெளி கூறுகளின் கலவையாகும். வாத  சமநிலை இன்மையின்  அறிகுறிகள் & விளைவுகள்

அறிகுறிகள் :-  உடல் அளவில் :

* மலச்சிக்கல் * வயிற்றில் வாயு உருவாக்கம் அல்லது விலகல் * உடல் வறட்சி * உலர் மற்றும் கடினமான தோல்  வலி மற்றும் பொதுவாக உடல்முழுவதும் வலி  * வாயில் அதிக உமிழ்நீர் * பலமின்மை, களைப்பு, சத்துக் குறைவு * தூக்கமின்மை * நடுக்கம் மற்றும் தசையிழுப்பு * மயக்க உணர்வு * குளிர் மற்றும் வெப்பத் தேவை 

நடத்தை அளவில்:

*  பகுத்தறிவற்ற நடத்தை , படபடப்பு, * ஆவேசம், பொறுமையின்மை * பணிகளைத் தவிர்த்து ஓடும் விருப்பம் * குழப்பம், பயம் மற்றும் நடுங்கும் உணர்வுகள் * உறுதியின்மை * அதிகமான இயக்கம் அல்லது பேச்சு 

விளைவுகள்:

* தசைகள் வீணடிக்கப்படுகின்றன * மூட்டு  வலிகள் * விறைப்பு தன்மை * தலைவலி * தேக்கம் * மலச்சிக்கல் * எடை இழப்பு * தசைப் பிடிப்புகள் * வலிப்பு , நடுக்கம், முடக்குவாத தாக்குதல்கள் * பெருங்குடல் பாதிப்பு * உலர் நிலை,  அடைப்பு * பயம்

பித்த சமநிலையின்மை

பித்தம்  நெருப்பு  அல்லது வெப்பத்துடன் தொடர்புடையது.  எங்கு மாற்றம் ஏற்பட்டாலும், இரைப்பை குடல்  பாதை, கல்லீரல், தோல், கண்கள் மூளை ஆகியவை பித்தம்  வேலை செய்யும் இடங்களாகும். பித்த சமநிலைஇன்மையின்  அறிகுறிகள் மற்றும்  விளைவுகள் அறிகுறிகள்

உடல் அளவில்:

*  அதிகமான தாகம் அல்லது பசி *  நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மை *  கண்கள், கைகள் மற்றும் பாதம் ஆகியவற்றில் எரிச்சல் *  உடலில் சூடு *  தோல் தடித்தல், முகப்பரு, மற்றும் கட்டிகள் *  பித்த வாந்தி  (மஞ்சள் நீர்) *  வெளிச்சத்திற்கு கண்கூசுதல் *  வலுவான உடல் நாற்றங்கள் *  குமட்டல் மற்றும் தலைவலி *  வயிற்றுப் போக்கு *  வாய்க் கசப்பு *  குளிர் சூழலுக்கு விருப்பம்;  வெப்ப பாதிப்பு 

நடத்தை நிலையில்:

* கடினமான பேச்சு மற்றும் செயல்கள் * தீர்ப்பு அல்லது விமர்சிக்கும்  போக்குகள் * கோபம், எரிச்சல், விரோதம் * வாக்கு வாதம், ஆக்ரோஷ அணுகுமுறை * பொறுமை மற்றும் அமைதியின்மை * விரக்தி

விளைவுகள்

* அமிலம் மிகுதல் * வீக்கங்கள் * இரத்தப்போக்கு * உயர் இரத்த அழுத்தம் * எரிச்சல் உணர்வுகள் * அதிகமான கழிவுகள் * தோல் தடிப்புகள், பருக்கள், கட்டிகள் * வெறி

கபம் சமநிலையின்மை:

இது உடல் அமைப்பு களுக்கு தேவையான கட்டமைப்புக்களை  வழங்குகிறது. இவை வாதத்தின் இயக்கம் மற்றும் பித்தத்தின்  வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. ஒரு பெரிய, கனகச்சிதமான கால்பந்து வீரர் அல்லது மல்யுத்த வீரர் கபத்தின்  மேலாதிக்கம் கொண்டவர். கபம்  என்பது பூமி மற்றும் நீர் ஆகிய கூறுகளின் கலவையாகும். கப சமநிலை இன்மையின்  அறிகுறிகள் & விளைவுகள்

அறிகுறிகள் :- உடல் நிலையில்

* சோம்பல் * குறைந்த அல்லது பசியின்மை, குமட்டல் * நீர் தேக்கம் * வெடிப்பு, சளி உருவாக்கம்  வாயில் அதிக உமிழ்நீர்   சுரப்பு * சுவாசத்தில் சிரமம் * அதிக தூக்கம் * வாயில் இனிப்பு சுவையுணருதல் 

நடத்தை நிலையில்:

* கனமாக உணருதல் * மன அழுத்தம், சோகம் * மந்தமான, செயலற்ற தன்மை * ஆதரவு அல்லது அன்பின் பற்றாக்குறையை உணருதல் * பேராசை, சிக்கிக்கொள்ளுதல், உடைமையுணர்வு

விளைவுகள்

* உடல்பருமன் * வீக்கங்கள் * நீர் தேக்கம் * அதிகமான சளி உற்பத்தி * கூடுதல் வளர்ச்சி * மன அழுத்தம்

நம்முடைய சமநிலையின்மைகள்  ஆகியவற்றின் இயல்புகளைப் புரிந்துகொள்வது சமநிலையை மீண்டும் பெறத்  தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.  அடுத்த முறை, குழப்பம் ஏற்பட்டால், பயம் ஏற்பட்டால், அல்லது தோல் தடிப்புக்கள்  அல்லது வறட்சியால் பாதிக்கப் பட்டால்,  என்ன தவறு  என்பதை நீங்கள் அறிந்து, அதற்கேற்ற  ஆயுர்வேத சிகிச்சையை செய்ய வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.இப்போது இந்த வாதம் பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று  அதிகரிக்கும் மற்றும் குறைக்கும்  காரணிகள் யாவை என்பதை அறிவீர்கள். நோய்களைத் தவிர்க்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வைப் பெறவும் தேவையான போது உங்கள் ஆயுர்வேத மருத்துவரின் பரிந்துரைகளை  மகிழ்ச்சியுடன் பின்பற்றுவீர்கள் ! வாழ்க தமிழ்……………….

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஸ்ட்ராபெர்ரியில் என்ன இருக்கிறது… அது எப்படி பெண்களை அழகாக்கும் தெரியுமா?

tamiltips

இலந்தை பழத்தை இப்படி சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்சனை தீரும்! இளநரை மாயமாகும்!

tamiltips

உங்கள் உதடுகள் கருப்ப இருக்குனு கவலையா? அதை போக்க எளிய வழிகள்!

tamiltips

நைட் ஷிப்ட் செல்பவர்களுக்கு என்னென்ன நோய்கள் வரலாம் ?? மருத்துவ எச்சரிக்கை ரிப்போர்ட் !!

tamiltips

உங்கள் பிள்ளையிடம் இந்த ஐந்து விஷயங்களும் இருக்குதான்னு பாருங்க.. அப்பத்தான் நிறைய மார்க் வாங்கமுடியும் !!

tamiltips

வெறும் பிராவுடன் விமானத்தில் ஏறிய இளம் பெண்! ஆண் பயணிகள் செய்த விபரீத செயல்!

tamiltips