மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின்
மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதன் காரணமாக ஆபரண தங்கத்தின் விலையானது
தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. பின்னர் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின்
விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி ஆபரண
தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,467 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 27,736 22 கேரட்
தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,310 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 26,480 ஆகவும்
இருந்தது.
இன்று சவரனுக்கு 496 ரூபாய்
வரை உயர்ந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,372 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது
ரூ.26,976 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு
ஒரு கிராம் ரூ.3529 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 28,232 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தின்
விலை நிலையாக இருந்து வரும் நிலையில் நியூயார்க் மற்றும் அமெரிக்கா நகர தங்கச் சந்தையில்
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 1413 டாலர்கள் என்ற அளவில் உள்ளது. நேற்றைய பட்ஜெட்டில்
இறக்குமதி வரி 12.5 சதவீதம் உயர்த்தப்பட்டதால் இங்கு தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது
மேலும் தங்கத்தின் விலை ரூ.30,000 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று சென்னையில் 22 கேரட்
மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:
1.8.2019 – 1 grm – Rs. 3529/-, 8
grm – 28,232/- ( 24 கேரட்)
1.8.2019 – 1 grm – Rs. 3372/-, 8 grm – 26,976/- (22 கேரட்)
வெள்ளி விலை இன்று கிராமுக்கு
40 காசுகள் குறைந்து கிலோ ரூ.44,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது..