யுனெஸ்கோ நிறுவனத்தினால் பாரம்பரிய ரயில் பாதையாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் இந்திய ரயில்வேயின் மிகப்பழமையான ரயில்சேவைகளில் ஒன்றாகும். 1899ம் ஆண்டு துவக்கப்பட்ட நீலகிரி மலை ரயில்சேவை இந்தியாவின் மலை ரயில் சேவைகளில் மிகவும் புகழ் பெற்றதாகும்.
தற்போது நீலகிரி மலை ரயில் சேவையில் உள்ள ரயில் பெட்டிகள் சுமார் 40 ஆண்டுகள் பழமையானவையாகும். இவை அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு பயணிகள் சேவையில் பயன்படுத்தப்பட்டு வந்தன.
தற்போது சென்னையில் உள்ள ஐசிஎப் ரயில்பெட்டித் தொழிற்சாலை முதன்முறையாக நீலகிரி மலை ரயில் சேவைக்கு அதிநவீன ஸ்டீல் ரயில்பெட்டிகளை தயாரித்து அனுப்பி உள்ளது. மொத்தம் 15 ரயில்பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது முதல் கட்டமாக 1 முதல் வகுப்பு, 2 இரண்டாம் வகுப்பு, 1 லக்கேஜ் மற்றும் பயணிகள் ரயில் பெட்டிகள் கொண்ட 4 ரயில் பெட்டி தொடர் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு அனுப்பப் பட்டுள்ளன.
இவை ரயில்பாதை வழியாக மேட்டுப்பாளையம் சென்றடைந்து நீலகிரி மலை ரயில் சேவையில் பயன்படுத்தப்படும். மீதம் உள்ள 11 ரயில்பெட்டிகளும் விரைவில் தயாரித்து அனுப்பப்படும்.
முதல் வகுப்புப் பெட்டியில் 32 பயணிகளும், இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 44 வீதம் 88 பயணிகளும், லக்கேஜ் ரயில்பெட்டியில் 26 பயணிகளும், ஆக மொத்தம் 146 பயணிகள் இந்த ரயில் தொடரில் அமர்ந்து பயணிக்கலாம்.
இந்த புதிய வகை ரயில்பெட்டிகளின் சிறப்பம்சங்கள்
ஸ்டெயின்லஸ் ஸ்டீல் ரயில்பெட்டிகள்
முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு லக்கேஜ் ரயில்பெட்டி என மூன்று வகை ரயில்பெட்டிகள்
சுற்றுலாப்பயணிகள் உள்ளே அமர்ந்து வெளிப்புற இயற்கை காட்சிகளை முழுமையாக கண்டு ரசிக்க பெரிய கண்ணாடிகள் கொண்ட சன்னல்கள்
செங்குத்தான மலைப்பாதையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாக பயணிக்க ரேக் பினியன் கொண்ட மீட்டர் கேஜ் ரயில்பெட்டிகள்
முதல் வகுப்புப் பெட்டியில் 32 பயணிகளும், இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 44 வீதம் 88 பயணிகளும், லக்கேஜ் ரயில்பெட்டியில் 26 பயணிகளும், ஆக மொத்தம் 146 பயணிகள் பயணிக்க இருக்கை வசதி.
மாற்றுத்திறனாளிகள் நேரடியாக ரயில்பெட்டியில் உள்ளே செல்ல இரண்டாம் வகுப்பு லக்கேஜ் ரயில்பெட்டியில் அகலமான கதவு மற்றும் சக்கர நாற்காலியை நிறுத்தும் வசதி.
வசதியாக பயணிக்க குஷன் இருக்கைகள்
எல்ஈடி விளக்குகள்
பிரேக் மேன் தனியாக அமர்ந்து பிரேக் இயக்க வசதி
ஒவ்வொரு பெட்டியிலும், எஞ்சின் டிரைவர், கார்டு மற்றும் பிரேக் மேன் மூவரும் பேசிக் கொள்ள வசதியாக மைக் மற்றும் ஸ்பீக்கர் வசதி
இனி ஊட்டி போறவங்க இந்த ரயில்லயும் ஒரு ட்ரிப் போய் என்ஜாய் பண்ணிட்டு வந்துடலாம்