Tamil Tips
குழந்தை பெண்கள் நலன் பெற்றோர்

ஒரே மாதத்தில் பளபளப்பான சருமம்… 10 புதுமையான இயற்கை சிகிச்சைகள்…

சருமம் அழகாக கண்ணாடி போல பளப்பளப்பாக இருக்க வேண்டும் என ஆசை. ஆனால், இதெல்லாம் நடக்குமா என்பார்கள் பலர். நிச்சயம் இயற்கை பொருட்கள் மூலம் சருமம் அழகாக, பளப்பளப்பாக மின்னும். அதற்கு இந்த 10 வகை சிகிச்சைகள் பலன் அளிக்கும்.

பளபளப்பான சருமம் கிடைக்க 10 இயற்கை சிகிச்சைகள்…

#1. ஃப்ரூட்ஸ் ஸ்கரப் – சரும நிறத்தை கூட்டும்

  • மாம்பழ ஸ்கரப்

மாம்பழத்தின் காம்பு பகுதியை நீக்கி விடுங்கள். மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள்.

ஒரு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் மாம்பழ ப்யூரி, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளை சர்க்கரை, ½ டீஸ்பூன் பால் இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.

முகத்தை நன்றாக கழுவிய பிறகு, ஈரத்தைத் துடைத்த பின் இதை முகத்தில் பூசி, தேய்க்கவும். கழுத்து, உதடு, கை, கால்களில் கூட ஸ்கரப் செய்யலாம்.

குளிப்பதற்கு முன், உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். இந்த மாம்பழ ஸ்கரப்பை வாரத்தில் இருநாள் பயன்படுத்தி குளிக்கலாம்.

Thirukkural

ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

  • ஆரஞ்சு ஸ்கரப்

பாதி ஆரஞ்சு பழச்சாறை எடுத்துக் கொள்ளுங்கள். விதைகளை நீக்கிவிடுங்கள். 4 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து ஸ்கரப் தயாரிக்கவும்.

வாரத்தில் 3 நாட்கள், இதை வைத்து ஸ்கரப் செய்யலாம்.

orange scrub for healthy skin

Image Source : Savvy Naturalista

பலன்கள்

பளப்பளப்பான சருமம் கிடைக்கும்.

தோலுக்கு தேவையான சத்துகள் சேரும்.

சீரான, அழகான சருமமாக மாறும்.

முகப்பொலிவு கூடும்.

பருக்கள் வராது.

இதையும் படிக்க : நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட நீங்கும்… இயற்கை வழி வைத்தியம் 

#2. ஃபேஸ் மாஸ்க்

ஒரு டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் ஏடு, 2 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். சரியான பேஸ்ட் பதத்துக்கு வர சிறிதளவு பால் சேர்க்கலாம்.

முகம் கழுவிய பிறகு இந்த மாஸ்கை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, சர்குலர் மோஷனில் மசாஜ் செய்து கழுவி விடுங்கள்.

வாரம் இருமுறை செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

பலன்கள்

  • கருமையை நீக்கும்.
  • சன் டேன் நீக்கும்.
  • கரும்புள்ளிகள் நீங்கும்.
  • பருக்கள் வராது.
  • சருமத்தில் பொலிவு கிடைக்கும்.
  • எண்ணெய் பசையை நீக்கும்.
  • முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கும்.

facepack for healthy skin

Image Source : Young and draw

#3. மிராக்கிள் ஜூஸ்

  • மாதுளை பழம் – ½
  • வேக வைத்த பீட்ரூட் – ½
  • சிறிய கேரட் – 2
  • தக்காளி – 1
  • நெல்லி – 1
  • ஆப்பிள் – ½

இவற்றை ஜூஸாக அரைத்து வாரம் 3 முறை குடித்து வந்தால் சருமம் பிரகாசமாக மாறிவிடும். எந்த மேக் அப்பும் தேவையில்லை. அழகான சருமம் உங்களுடையதுதான்.

இதையும் படிக்க : உடல் எடையை குறைக்கும் 3 ஹெல்தி பானங்கள்… 

#4. பளப்பளப்பாக்கும் மாஸ்க் – பருக்களை விரட்டும்

1 டீஸ்பூன் கற்றாழை ஜெல், எலுமிச்சை சாறு பாதி பிழிந்து கொள்ளவும். இதை நன்றாக கலந்து காட்டனில் நனைத்து முகத்தில் பூசவும்.

10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.

#5. பளிச் நிறம் தரும் மாஸ்க்

brightness face pack for healthy skin

Image Source : Kale and Caramel

ஒரு டீஸ்பூன் தேன், அரை டீ ஸ்பூன் காய்ச்சாத பால்,  ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்… இதை நன்றாக கலந்து முகம், கழுத்து ஆகிய இடங்களில் பூசி 5 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.

கழுவுவதற்கு முன் சர்குலர் மோஷனாக மசாஜ் செய்யவும்.

#6. ஆரஞ்சு தோல் மாஸ்க்

2 டேபிள் ஸ்பூன் கெட்டி தயிர், 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி இவற்றை பேஸ்டாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.

#7. இயற்கை சரும சிகிச்சை

இயற்கை ஸ்கரப்

பாசி பயறை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை எடுத்து முகத்தில் ஸ்கரப் செய்யுங்கள்.

உலர்ந்த சருமம் இருப்பவர்கள் வாரம் ஒருமுறை செய்யலாம்.

எண்ணெய் சருமம் இருப்பவர்கள் வாரத்தில் 3 முறை செய்யலாம்.

#8. ஸ்கின் க்ளோ ஜூஸ்

தக்காளி – 1, கேரட் – 1, கீரை – 4, புதினா, கொத்தமல்லி – சிறிதளவு இவற்றை அரைத்து ஜூஸாக குடிக்கலாம். இதை காலை உணவுடன் இந்த ஜூஸ் குடிக்க சருமம் அழகாக மாறும்.

#9. சருமத்துக்கு உடனடி புத்துணர்வு கிடைக்கும் ஜூஸ்

healthy juice for healthy skin

மிக்ஸியில் பாதி டம்ளர் தண்ணீர், 1 கப் அன்னாசி துண்டுகள், ஒரு கைப்பிடி புதினா, ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு இன்ச் இஞ்சி போட்டு அரைத்து குடிக்கலாம்.

பலன்கள்

  • உடனடியாக சருமத்தை புத்துணர்வாக்கும்.
  • ஃப்ரெஷ் லுக் கொடுக்கும்.
  • சோர்வான முகம் புத்துணர்வடையும்.
  • சருமத்துக்கு தேவையான சத்துகள் கிடைக்கும்.
  • தொப்பைக் கரையும்.

இதையும் படிக்க : நகங்கள் காட்டும் நோய் அறிகுறி… நகங்களைப் பராமரிப்பது எப்படி? 

#10. பப்பாளி கூழ் மாஸ்க்

பப்பாளி கூழை அரைத்து முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகளை நன்கு சாப்பிட வைக்க என்ன வழிகள்?

tamiltips

கொசுக்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிகள்…

tamiltips

பேபீஸ் ஸ்பெஷல்… 10 நிமிடங்களில் செய்யகூடிய 5 சூப் ரெசிபி…

tamiltips

தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும் இயற்கை வழிகள்… மல்லிப்பூ வைத்தியம் பலன் தருமா? டிப்ஸ்…

tamiltips

11 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

tamiltips

அடர்த்தியான முடி வளர டிப்ஸ்!

tamiltips