குழந்தைகளின் சோப், பாடி வாஷ்ஷில் கெமிக்கல்கள் கலந்து வருவதாக சொல்லப்படுகின்றன. எனவே இயற்கையான, ஆரோக்கியமான முறையில் நாமே நம் குழந்தைகளுக்கு குளியல் பொடி தயாரிப்பதே சிறந்த வழி.அதை இரண்டு முறைகளில் செய்ய முடியும். எப்படி எனப் பார்க்கலாமா …
குளியல் பொடி தயாரிக்கும் முறை 1
தேவையானவை
- பச்சைப்பயறு – ½ கிலோ
- கடலப்பருப்பு – ½ கிலோ
- கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம் (ஆண் குழந்தைக்கு – 10 கிராம்)
- பூலாங்கிழங்கு – 10 கிராம்
- ஆவாரம்பூ – 50 கிராம்
- ரோஜா – 50 கிராம்
- செம்பருத்தி பூ – 10
- வேப்பிலை – 30 கிராம்
- துளசி – 30 கிராம்
- வெட்டிவேர் – 10 கிராம்
செய்முறை
- மேற்சொன்ன அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
- இவையெல்லாம் காய வைத்துதான் விற்கப்படும்.
- நீங்களே வீட்டில் இருப்பதைப் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும்.
- இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
- இதையே குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஏற்றது.
இதையும் படிக்க : குழந்தைகளுக்கான சத்துமாவு – ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?
யார் பயன்படுத்தலாம்?
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
- ஆனால், ஆண் குழந்தைகளுக்கு, ஆண்கள் இதைப் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை மட்டும் நீக்கிவிட்டு இதைப் பயன்படுத்தலாம்.
பலன்கள்
- குழந்தைகளுக்கு இந்தப் பொடி மிகவும் நல்லது.
- குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.
- இயற்கையாகவே சருமத்தில் சுரக்கும் எண்ணெயை நீக்காமல் பாதுகாக்க உதவும்.
- துர்நாற்றம் வருவது தவிர்க்கப்படும்.
- உடலில் எங்கும் சரும தொந்தரவுகள் வராது.
- வெயில் காலங்களில் ஏற்படும் சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும்.
- சருமத்தில் கருமை இருந்தால் அவை நீங்கும்.
- பரு, மரு, கருத்திட்டுக்கள் வராமல் தடுக்கப்படும்.
- வியர்க்குரு தொல்லையும் இருக்காது.
- பெண் குழந்தைகள், பெண்கள் இதைப் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும். மீண்டும் முடி சருமத்தில் வளராது. வாக்சிங் செய்யத் தேவையில்லை.
குளியல் பொடி தயாரிக்கும் முறை 2
தேவையானவை
- ரோஜா இதழ் – 150 கிராம்
- பச்சைப்பயறு – 200 கிராம்
- கடலப்பருப்பு – 100 கிராம்
- கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம் (ஆண் குழந்தைக்கு – 10 கிராம்)
- வேப்பிலை – 50 கிராம்
- ஆரஞ்சு தோல் – 3-4 பழத்தின் தோல்கள்
- பாதாம் – 10
- எக்சோரா பூ (இட்லி பூ) – 1 கப்
- செம்பருத்தி பூ – 10
செய்முறை
- இவை அனைத்தையும் நன்றாக காய வைத்துக் கொள்ளவும்.
- கடையில் கொடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அவ்வளவுதான் குளியல் பொடி ரெடி.
யார் பயன்படுத்தலாம்?
- குழந்தைகள், பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம்.
- ஆண் குழந்தைகளுக்கு, ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க : குழந்தைகளுக்கான ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் தயாரிப்பது எப்படி?
பலன்கள்
- தோலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன.
- இயற்கையாகவே சருமம் பொலிவு பெறும்.
- மினுமினுப்பான தோற்றம் கிடைக்கும்.
- வியர்வைத் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
- சருமத்தில் இயற்கையான பளிச் பிரகாசம் தெரியும்.
- சருமத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.