Tamil Tips
குழந்தை பிரசவத்திற்கு பின் பெற்றோர்

குழந்தை எப்போது பேசும்? பெற்றோர் குழந்தைக்கு எப்படி பயிற்சி தருவது? டிப்ஸ்…

சில குழந்தைகள் விரைவில் பேச தொடங்கும். சில குழந்தைகளுக்கு பேசுவதில் தாமதமாகும். குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேச (helping your child speech) பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? இந்தப் பதிவில் இதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு பேசும் திறன், கேட்கும் திறன் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வது நல்லது.

இதையும் படிக்க: குழந்தையின் காது கேட்கும் திறனையும் பேசும் திறனையும் அறிவது எப்படி?

பேச முயற்சி செய்வதன் அறிகுறிகள்…

6 மாத குழந்தைகளுக்கு, வாயிலிருந்து ‘ஜொள்ளு வழிதல்’ அறிகுறி தெரியும். பேச முயற்சி செய்யும் அறிகுறிகளும் தென்படும். இதனால் பேச்சு திறனை உறுதி செய்யலாம்.

குழந்தையிடம் பேசும்போது, வாய் அசைவைப் பார்த்து, சத்தம் வருவதைக் குழந்தை உணர்ந்து கொண்டு ‘உர்’ என எச்சிலை ஊதி தள்ளும். இதுவே குழந்தை பேச தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

Thirukkural

நீங்கள் பேசும்போது உங்களையே பார்த்துக்கொண்டு தானும் பேச முயலுவதைப் போல ‘ங்… ஞ…ங்க…ஞ…’ என்று குரல் எழுப்பும்.

நீங்கள் பேசும் சத்தம் பார்த்து தன் கவனத்தைத் திருப்புவதும் நல்ல அறிகுறிதான். காது நன்றாக கேட்கிறது. எனவே, பேச்சும் இயல்பாக வரும் என அர்த்தம்.

குழந்தை எப்படி பேச தொடங்கும்?

குழந்தை பேசுவதற்கு முன்பு அதன் கேட்கும் திறன் நன்றாக இருக்க வேண்டும்.

நாம் பேசுவதை குழந்தை நன்கு கூர்ந்து கவனித்த பின்பு, அதற்கு பதில் சொல்லவோ செய்கை செய்யவோ முயற்சி செய்யும்.

கேட்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் சரியாக இருக்க வேண்டும். அதற்கான வளர்ச்சி இருந்தால் மட்டுமே, விரைவில் குழந்தையால் பேச முடியும். பேசவும் தொடங்கும்.

when do babies talk

Image Source : Hello doktor

பிறந்த குழந்தை தெரிந்த ஒரு வார்த்தை என்ன?

முதல் ஒன்றிரண்டு மாதங்கள் நாம் பேசுவதை நாம் வாய் அசைப்பதைக் கவனிக்கும். தலை அசைப்பதைக் கவனிக்கும். கை, கால் ஆட்டுவதைப் பார்க்கும்.

‘ங்ஞா, ங்ஞா’ என்ற வார்த்தைதான் குழந்தைக்கு பேச வரும்.

பசி வரும் போது, தன்னை யாரும் கவனிக்காதபோது இப்படி சத்தமிடும்.

அடித்தொண்டையிலிருந்து இப்படி கத்தி சத்தம் போடும்.

3 மாத குழந்தைகள்…

கீ, ஆ, யா, கூ என்று சொல்லி கத்த ஆரம்பிக்கும்.

பசி, சிறுநீர் கழித்த பின், வயிறு வலி, எக்களித்தல், வாந்தி எடுத்த பின் இப்படி கத்தலாம்.

7 மாத குழந்தைகள்…

ஊ, ஊ எனக் கத்த ஆரம்பிக்கும். அருகில் இருப்பவர்களை அழைக்கும். தூக்க சொல்லி கைகளைக் காட்டலாம். குதிக்கவும் செய்யலாம்.

ஒரு வயது குழந்தைகள்…

வா, போ, தா, பிடி, கொடு, எடு எனப் பேசும்… இந்த வார்த்தைகளையும் புரிந்துகொள்ளும்.

வா, உட்காரு, பை சொல்லு, டாட்டா சொல்லு போன்ற கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படும். அதேசமயம், தானும் அதுபோன்ற சொற்களை சொல்லி பேச ஆரம்பிக்கும்.

அனுபவத்தால் அறிந்த சத்தம், வார்த்தை, மொழி இவை… கீழே உள்ள உதாரணங்களைப் பார்க்க…

ங்கா – பசி

ஆவ்வ்வ் – உணவு போதும்

ம்ம் – இன்னும் வேணும்

ஓ…ஓ… – தூக்கம் வருது

ஹே – உடல் வலிக்குது

ஏ – வயிறு வலி

ச்ச் – சிறுநீர்

ர்ர்ர் – அபானவாயு பிரிகிறது

ங்கே – கொஞ்ச வேண்டும்

இதையும் படிக்க: எந்த குழந்தைகள் கற்றல் குறைபாட்டால் (டிஸ்லெக்சியா) பாதிக்கப்படுகிறார்கள்? அறிகுறிகள் என்ன?

வீட்டில் இப்படி ஒரு சூழல் அவசியம்!

பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் தினமும் குழந்தையிடம் பேசி, சிரித்து, கொஞ்சி விளையாட வேண்டும்.

என்ன பன்றீங்க… சாப்டீங்களா… பாப்பாக்கு பசிக்குதா… பாப்பாக்கு தூக்கம் வரலையா என எதாவது குழந்தையிடம் பேசி கொண்டு இருப்பது நல்லது. இதுவே மிகவும் முக்கியமான பயிற்சி.

குழந்தைகள் நீங்கள் பேசுவதைௐ கவனிக்கும். மெல்ல மெல்ல ஒவ்வொரு எழுத்தாக குழந்தையும் சத்தம் போட ஆரம்பிக்கும்.

குழந்தையை சுற்றி பெரியவர்கள் உட்கார்ந்து பேசும் வீட்டில், வெகு விரைவில் குழந்தைகள் பேசுவார்கள்… 10 மாதத்திலே ஒரு குழந்தை இரண்டு எழுத்துகளை கோர்த்து பேசும் அளவுக்கு திறன் கொண்டிருந்தான். அதற்கு காரணம் அந்த வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையிடம் அவ்வப்போது பேசி கொஞ்சி விளையாடியதே முக்கிய காரணம்.

அம்மா சொல்லு, அப்பா சொல்லு, அண்ணா சொல்லு என உறவுகளின் பெயரை சொல்ல சொல்லி பழக்குவது குழந்தைகளுக்கான சிறந்த பயிற்சி.

மா, ப்பா, தா, வா இப்படி ஒவ்வொரு எழுத்தாக குழந்தையிடம் பேசி பேசி கற்பிக்கலாம்.

when should babies start talking

Image Source : Parenting

2 வயது…

குழந்தைக்கு 2 வயதாகியும் பேசவரவில்லை என்றால் கட்டாயம் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். அலட்சியம் வேண்டாம்.

என்னென்ன பயிற்சிகள்?

குழந்தைகளுக்கு ஏதாவது வார்த்தை சொல்லி தரும்போது அதன் படத்தை காண்பித்து சொல்லி தரலாம். நாய், பூனை படம் காண்பித்து அதன் பின் அந்த வார்த்தை சொல்லி தரலாம். குழந்தைகளுக்கு படங்களுடன் கூடிய புத்தகங்களை காண்பித்து, சொல்லிக் கொடுக்க வேண்டும்.

படங்கள், வார்த்தை, சத்தம், ரைம்ஸ், பாடல்கள்… இதெல்லாம் பேசுவதற்கான பயிற்சிகள்தான்.

மம்மு, புவா போன்ற மழலை வார்த்தைகளை சொல்லலாம். சாப்பாடு, சாதம், ரசம், குழம்பு, பிஸ்கெட் என நேரடியாக வார்த்தைகளை சொல்லுங்கள்.

குழந்தைகளுக்கு பாட்டுபாடி காண்பிக்கலாம். ரைம்ஸ் சிடி போடலாம். குழந்தை பாடல்களை ஒலிக்க விடலாம்.

அதிகமாக வெட்கப்படும் குழந்தைகளின் வெட்கத்தைப் போக்க பெற்றோர் நிறைய பழக வேண்டும். குழந்தையை பாதுகாப்பாக உணர வைக்கலாம். பின்னர் பேச பயிற்சி தரலாம்.

குழந்தைகளை பெரியவர்கள், மற்ற குழந்தைகள் போன்ற அனைவரிடமும் பழகினால்தான் பேச்சு விரைவில் வரும்.

அதிகமாக நாம் குழந்தையிடம் நேரம் செலவழிக்கவில்லை எனில் குழந்தை பேச தாமதமாகும்.

உறவு முறைகளின் பெயர்கள், உங்களது பெயர், விலங்குகள் பெயர் போன்றவற்றை சொல்லி தரலாம்.

கதைகளை சொல்லுங்கள். புதுப்புது வார்த்தைகளைக் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். கதை சொல்லுவது அற்புதமான பயிற்சி.

இதையும் படிக்க: குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளை தெரிந்துகொள்ளுங்கள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்(0 முதல் 1 வயது வரை)

tamiltips

வயிற்று போக்கு சரியாக பாட்டி வைத்தியம்!

tamiltips

வாயு தொல்லையைப் போக்க என்னென்ன வழிகள்? உடனடி தீர்வு…

tamiltips

பச்சை, கருப்பு, வெள்ளை, பழுப்பு… குழந்தையின் மலம் எந்த நிறத்தில் இருக்க கூடாது?

tamiltips

எந்த கருத்தடை பாதுகாப்பானது? ஆண், பெண்ணுக்காக கருத்தடை சாதனங்கள் என்னென்ன?

tamiltips

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

tamiltips