பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் சி, நோய்களை எதிர்க்க இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். பச்சை மிளகாயில் விட்டமின் ஈ யும் கூட அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம். பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே பெண்கள் உட்கொள்வது நல்லது.
மிளகாயில் உள்ள பைட்டோநியூட்ரியன்கள் புற்றுசெல்களின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது.
மேலும் ஏற்கனவே புற்றுநோயால் பாதிப்பட்ட செல்களையும் பாதுகாக்கிறது. இக்காயில் டானின் புற்றுச்செல்களின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது. மிளகாயின் புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது நுரையீரல், கல்லீரல் மற்றும் இரைப்பை புற்றுநோயையும் தடைசெய்கிறது. எனவே மிளகாயினை உணவில் சேர்த்தால் புற்றுநோயைத் தடுக்கலாம்.
நல்ல விஷயங்கள் நிறைய இருந்தாலும், மிளகாயை அளவோடுதான் எடுக்க வேண்டும். சிலர் அதிக மசாலா, காரம் சேர்த்த உணவுகளை மட்டுமே எப்போதும் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால் குடல் பிரச்சனை, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, மூலநோய் போன்றவை வரலாம். மிகவும் காரமான உணவு உண்ணும் போது, அந்தக் காரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த மிதமான உணவுகளையும் எடுக்க வேண்டும்.
அதனால்தான் தயிர்சாதம், ஊறுகாய் போன்றவற்றை நம் முன்னோர் சேர்த்துப் கொண்டார்கள்.