பிப்ரவரி 13 ஆம் தேதியிலிருந்து தங்கம் விலை கிடுகிடுவென்று ஏறிக்கொண்டே வருகிறது. 13 ஆம் தேதியிலிருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,264//- அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தூய தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 4,177 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 33,416 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,978/- ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 31,824 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,012/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 32,096/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288/- அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,213/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 33,704/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:
21.2.2020 – 1 grm – Rs. 4,213/-, 8 grm – 33, 704/- ( 24 கேரட்)
21.2.2020 – 1 grm – Rs. 4,012/-, 8 grm – 32,096/- (22 கேரட்)
வெள்ளி விலையும் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 700/- அதிகரிக்கத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.51.60 ஆகவும் கிலோவுக்கு ரூ.51,600 ஆகவும் இருந்த வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 52.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.52,300/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..