தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் கருத்தரிப்பை தடுப்பதற்கு பலவித வழிமுறைகள் உள்ளன. மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவராலும் கருத்தரிப்பை தடுப்பதற்கு பல வழிகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தக் காலத்தில் கருத்தரிப்பு தடுக்க வேண்டும் என்றால் அது முற்றிலும் பெண்களை சார்ந்தே இருந்தது. ஆகையால் பெண்களை கருத்தரிக்காமல் தடுப்பதற்கு பல வித மோசமான செயல்முறைகள் கையாளப்பட்டுள்ளன.
கடந்த 1400 ஆம் ஆண்டுகளில், பெண்கள் வெங்காயச் சாறு கலந்த கலவையை குடித்து அதன் மூலம் தங்களுக்கு கருத்தடை ஏற்படும் என்று நம்பினர். இந்த சாறு குடித்த சில நிமிடங்களில் அதிலிருந்து வெளிப்படும் துர்நாற்றம் பிறப்பு கட்டுப்பாடாக இருந்திருக்கக்கூடும் என யூகிக்கப்படுகிறது. சொல்லப்போனால் துர்நாற்றம் வீசும் ஒரு வேலையில் உடலுறவு வைத்துக் கொள்வது என்பது அசாதாரணமானது ஆகும். அதேபோல் பண்டையகால எகிப்தியர்கள் முதலையை கருச்சிதைவை ஏற்படுத்தும் கடவுளாக வணங்கி வந்தனர். ஆகையால் முதலையின் சாணத்துடன் , தேன் மற்றும் பஞ்சு ஆகியவற்றை பயன்படுத்தி விந்தணுக்களை அழிக்கும் கவசமாக பயன்படுத்தினர் என்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு இடங்களில் மரநாயின் விதைப்பைகளை உடலில் ஆபரணங்களாக அணிவதன் மூலம் கருத்தரிப்பை தடுக்க முடியும் என்று நம்பியிருந்தனர். ஆனால் இது வெறும் மக்களின் நம்பிக்கை மட்டும் தான். இதன் உச்சக்கட்டமாக பெண்கள் தார், ஈயம், நிலக்கரி ஆகியவை கலந்த கலவையை அவர்களின் பிறப்பு உறுப்பில் பூசிக் கொள்வதை நிரந்தர கருத்தரிப்பை தடுக்கும் வழிமுறையாக பயன்படுத்தியுள்ளனர். இது சற்று ஆபத்தான வழிமுறை என்பது குறிப்பிடத்தக்கது. சமயங்களில் இதன் மூலம் இறப்பு கூட ஏற்படலாம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இதேபோல் ஆண்கள் கருத்தரிப்பை கட்டுப்படுத்துவதற்கு பன்றியின் கொழுப்பை தங்களது ஆணுறைகள் ஆக பயன்படுத்தியுள்ளனர். அனைத்திற்கும் மேல் பெண்கள் கருத்தரிப்பை தடுப்பதற்கு அவர்களது யோனியில் உலோகங்களையும் வைத்து அடைத்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.