Tamil Tips
குழந்தை சமையல் குறிப்புகள் பெற்றோர்

சுவையான 10 தேங்காய் பலகாரங்கள் உங்கள் குழந்தைகளுக்காக

தேங்காய் அதிகம் புரத சத்து கொண்டது. நம் தென் இந்தியாவில், குறிப்பாக, தமிழ் நாடு, கேரளா மற்றும் ஆந்திரா போன்ற இடங்களில் தேங்காய் சமையலில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. மேலும், தேங்காயைப் பயன்படுத்தி பல வகை இனிப்பு மற்றும் கார பலகாரங்களும் செய்யப் படுகிறது. இது மிகவும் ருசியாகவும், குறிப்பாக குழந்தைகள் விரும்பி உண்ணக் கூடியதாகவும் உள்ளது. Coconut recipes for kids.

நீங்கள் உங்கள் குழந்தைகளை ஆச்சரியப் படுத்தும் பொருட்டு இவ்வகை பலகாரங்கள் ஏதாவது செய்து பார்க்க எண்ணினால், பின் வரும் இந்த 10 தேங்காய் பலகாரங்களும் உங்களுக்கானதுவே! இதோ, மேலும் படியுங்கள், தேங்காய் பலகாரங்கள் உங்கள் குழந்தைகளுக்காக!(coconut recipes for kids in Tamil)

10 சுவையான தேங்காய் பலகாரங்கள் (10 Tasty Coconut Recipes For Kids In Tamil)

#1. தேங்காய் சாதம் (Coconut Rice)

coconut-rice

மிகவும் எளிதாக செய்யக் கூடியது. உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாகப் பள்ளிக்குக் கொடுத்து விடலாம். விரும்பி உண்பார்கள். இதன் மணமும், நிறமும், ருசியும் உங்கள் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும்.

#2. தேங்காய் சீரா (Coconut Sheera)

இது ஒரு இனிப்பு பலகாரம். தேங்காய்ப் பால் கொண்டு இதனைத் தயார் செய்வார்கள். இது க்ரீமியாகவும் மிகவும் ருசியாகவும் இருக்கும். பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் இதனை அதிகம் மக்கள் செய்வார்கள். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.

Thirukkural

#3. தேங்காய் ரவா லட்டு (Coconut Rava Laddu)

coconut-rava-laddu

இது மற்றுமொரு ருசியான மற்றும் செய்வதற்கு எளிமையான பலகாரம். ரவை மற்றும் தேங்காய் துருவல் கொண்டு இதனை எளிதாக செய்து விடலாம். ஏலக்காயின் மனமும், தேங்காயின் ருசியும் கலந்து உங்கள் குழந்தைகளை சுண்டி இழுக்கும்.

#4. தேங்காய் பச்சடி (Coconut Pachchadi)

இதை நீங்கள் உங்கள் மதிய உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். தக்காளி சாதம், புளியோதரை மற்றும் சாம்பார் சாதத்திற்கு ஏற்ற பதார்த்தமாக இது இருக்கும். இதை செய்வது மிக எளிது. அதிக நேரம் எடுக்காது.

#5. தேங்காய் பர்பி (Coconut Burfi)

Coconut-burfi

இது மற்றுமொரு பிரபலமான தென்னிந்திய பலகாரமாகும். இதனைக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இனிப்பாகவும், தேங்காயின் ருசி நிறைந்தாகவும் இது இருக்கும். குறைவான நேரத்தில் உங்கள் குழந்தைக்கு மாலை சிற்றுண்டியாக இதனை நீங்கள் செய்து கொடுக்கலாம். சத்து நிறைந்த பலகாரமாகவும் இது இருக்கும்.

#6. தேங்காய் சட்னி (Coconut Chutney)

இதைப் பற்றி அதிகம் விவரிக்க வேண்டாம் என்றாலும், இதிலும் பல வகை உள்ளன என்று நீங்கள் தெரிந்து கொண்டால், இனி உங்கள் வீட்டில் தினமும் இட்லி, தோசை மற்றும் பிற பிரதான உணவுகளுக்கு இது ஒரு முக்கிய சேர்மானமாகும். இதன் சுவை நிச்சயம் உங்கள் குழந்தைகளை மேலும் இரண்டு இட்லிகள் அல்லது தோசைகளை சாப்பிடத் தூண்டும். நீங்கள் இதனை எளிதாக செய்து விடலாம். வறுத்த தேங்காய் சட்னி மிகவும் பிரபலமானது. இது அதிக சுவையாகவும் இருக்கும்.

#7. தேங்காய் கேக் (Coconut Cake)

Coconut-cake

இந்த கேக்கை நீங்கள் எளிதாக வீட்டிலேயே செய்து விடலாம். இது மிக மிருதுவாகவும், உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் மைக்ரோ அவன் இருந்தால் நீங்கள் இன்னும் எளிதாக பல வகை தேங்காய் கேக்களை செய்து உங்கள் குழந்தைகளை அசத்தலாம்.

#8. தேங்காய் துருவல் இட்லி (Coconut Idli)

இதனை நீங்கள் ரவையுடனும் சேர்த்து சமைக்கலாம். மிக ருசியான ஒரு இட்லி. எப்போதும் சமைக்கும் வழக்கமான இட்லியில் இருந்து சற்று மாறுபட்டு உங்கள் குழந்தைகளைக் குதூகலப்படுத்த இந்தத் தேங்காய் துருவல் இட்லி ஒரு அருமையான பலகாரம். இதனை நீங்கள் எளிதாக காலை உணவிற்கு சமைக்கலாம். நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

#9. தேங்காய் பால் பிரியாணி (Coconut Milk Biryani)

Coconut-milk-briyani

கேட்கும் போதே உங்கள் நாவில் எச்சில் ஊரும்! சமைத்து தான் பாருங்களேன்! தேங்காய்ப் பால் கொண்டு நீங்கள் எளிதான பிரியாணி செய்தால் அதன் ருசி பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளும் விரும்பி இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இனி நீங்கள் நிதானிக்க வேண்டாம், உடனே செய்து பாருங்கள்.

#10. தேங்காய் இடியாப்பம் (Coconut Idiyappam)

உங்கள் குழந்தை இடியாப்பம் சாப்பிட அடம் பிடிக்கிறதா? இனிக் கவலை வேண்டாம். தேங்காய்த் துருவலை இடியாப்பத்துடன் சேர்த்து சிறிது சர்க்கரை மற்றும் நெய் விட்டு உங்கள் குழந்தைகளுக்கு சுட சுட கொடுத்தால், அவர்கள் இனி இந்த இடியாப்பத்தை மீண்டும் மீண்டும் உங்களை செய்து தர சொல்லி தொல்லை செய்வார்கள். மேலும் நீங்கள் ஆப்பத்தையும் இந்தத் தேங்காய்ப் பாலுடன் கொடுக்கும் போது இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்.

இங்கு மேலே பல வகை தேங்காய் பலகாரங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.எனவே உங்கள் குழந்தைகளுக்கு சத்தானதாகவும், ருசியானதாகவும் நீங்கள் செய்து தர எண்ணினால், இந்த பலகாரங்கள் நிச்சயம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இனி தயக்கம் ஏன்? உடனடியாக உங்கள் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு தேங்காய் பலகாரம் செய்யத் தொடங்குங்கள்.மேலும் இத்தோடு வலைதளத்தில் உள்ள பல்வேறு பலகாரங்களையும் நீங்கள் பார்க்கலாம்!

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கொசு கடி காயத்தை நீக்கும் 5 வீட்டு வைத்தியம்

tamiltips

உணவுகள் மூலம் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி?

tamiltips

குழந்தைகளுக்குத் தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

tamiltips

6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர்

tamiltips

குழந்தை பிறக்கும்போது என்னவெல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும்?

tamiltips

குழந்தைகள் உள்ள வீட்டில் இருக்க வேண்டிய 7 முக்கியமான வீட்டு வைத்தியம்

tamiltips