Tamil Tips
குழந்தை பெண்கள் நலன் பெற்றோர் முக்கிய செய்திகள்

ரத்தத்தைச் சுத்தம் செய்து எந்த நோயும் வராமல் தடுக்கும் உணவுகள்…

தினமும் குளிக்கிறோம். முகம் கழுவுகிறோம். நம் கண்களால் பார்க்கும் விஷயத்தை சுத்தம் செய்து கொள்ள முயற்சிக்கிறோம். ஏனெனில் கிருமிகளின் தாக்கியிருக்குமோ, சரும பிரச்னை வந்துவிடுமோ என்ற பயம். இதுவே நம் கண்களால் பார்க்க முடியாதவற்றை நாம் தினந்தோறும் சுத்தம் செய்கிறோமா? நிச்சயம் இல்லை.

நாள்தோறும் நம் உடலில் ஓடும் ரத்தத்தில் அசுத்தங்கள், நச்சுகள், கழிவுகள் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இதன் விளைவு நோய்கள், சாதாரண சரும பிரச்னை தொடங்கி வெரிகோஸ் வெயின், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கும் ரத்த சுத்தமின்மையே ஒரு முக்கிய காரணம். நோய்களுக்கும் இது வழி வகுக்கும்.

ரத்தத்தை ஏன் சுத்தம் செய்ய வேண்டும்? ரத்தம் சுத்தமாக இருக்க என்னென்ன சாப்பிட வேண்டும் என்று விளக்கமாக பார்க்கலாம்.

ரத்தம் சுத்தமாக இருந்தால் மட்டுமே….

நோய் எதிர்ப்பு சக்தி சீராக இருக்கும்.

சருமம் அழகாக இருக்கும்.

Thirukkural

நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் திறம்பட வேலை செய்யும்.

ரத்தம் மூலமாகதான் ஆக்சிஜன், சர்க்கரை, கொழுப்பு, செல்கள் ஆகியவை உடலெங்கும் செல்கின்றன.

ஹார்மோன்கள் சீராக வேலை செய்யவும் ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

பருக்கள், மரு, சரும பிரச்னை இருந்தால் ரத்தம் சுத்தம் இல்லை என்ற அர்த்தம்.

ஆரோக்கியமற்ற சருமத்தின் அடையாளம் ரத்தம் சுத்தமின்மையை குறிக்கிறது.

தலைவலி, அலர்ஜிக்குகூட இது ஒரு காரணம்.

ரத்தம் சுத்தமாக இருந்தால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியும் எனப் புரிந்திருக்கும். இப்போது ரத்தம் சுத்தமாக இருக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் எனப் பார்க்கலாம்.

ரத்தத்தைச் சுத்திகரிக்கும் உணவுகள்…

புரோக்கோலி

brocoli

இதையும் படிக்க: பொன்னியைவிட பல மடங்கு சத்துகள் உள்ள 10 பாரம்பர்ய அரிசி வகைகள்… குழந்தைக்கு தருவது எப்படி?

உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் திறன் கொண்டது.

வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.

விட்டமின் சி, கால்சியம், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், பொட்டாசியம் இன்னும் பல சத்துகள் உள்ளன.

பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை விரட்டும் முதல் மருந்து இது.

சாலட், குருமா, கிரேவி என எதாவது ஒருவகையில் புரோக்கோலியை சேர்த்துக்கொள்ளுங்கள்.

எலுமிச்சை

ஒரு டம்ளர் இளஞ்சூடான தண்ணீரில், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அன்றாடம் குடிக்க 2 மாதத்தில் உடலில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

இதை வெறும் வயிற்றில் குடிப்பதே சிறந்தது.

ஃப்ரெஷ் பழங்கள் அனைத்தும்

ஆப்பிள், கொய்யா, மாதுளை, கிவி, வாழைப்பழம், திராட்சை, மாம்பழம், பப்பாளி என அனைத்துப் பழங்களும் ரத்தத்தை சுத்தம் செய்யும்.

ரத்தத்தில் உள்ள கெமிக்கல்கள், கழிவுகளை வெளியேற்ற உதவுவதில் சிறந்தது.

செம்பருத்திப்பூ

செம்பருத்திப்பூ கிடைத்தால் தினம் ஒன்று சாப்பிடலாம்.

செம்பருத்தி டீயாக குடிக்கலாம்.

செம்பருத்திகளை உலரவைத்து பொடியாக்கி, அதில் டீ தயாரித்தும் குடிக்கலாம்.

சிறுநீரகத்தின் வடிகட்டியாக செயல்படும் இந்தப் பூ.

செம்பருத்தி ரத்தத்தை சுத்தம் செய்யும்.

இதையும் படிக்க: 6 + மாத குழந்தைகளுக்கான சத்தான உணவு பட்டியல்…

ABC ஜூஸ்

ஆப்பிள் – 1

பீட்ரூட் – பாதி

கேரட் – 1

இவைதான் ஏபிசி… இதை மூன்றையும் சேர்த்து, அரைத்து ஜூஸாக்கி குடித்து வர ரத்தம் சுத்தமாகும்.

வாரம் 2 முறை குடிக்கலாம்.

அனைத்துக் கீரைகள்

ஊட்டச்சத்து ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கொட்டிக் கிடக்கின்றன.

கல்லீரலை சுத்தம் செய்யும்.

நச்சை நீக்கும்.

தண்டு, இலைகளைக் கொண்ட காய்கறிகளும் மிகவும் நல்லது. பீட்ரூட், கேரட், முள்ளங்கி போன்றவை

வெல்லம்

செரிமானத்துக்கு உதவி செய்து, மலச்சிக்கலைப் போக்கி கழிவுகளை வெளியேற்றும்.

இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், ரத்தத்தின் சுழற்சி சீராக இருக்கும்.

ரத்தத்தை எங்கேயும் தங்காமல் பாதுகாக்கும்.

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

ஆளிவிதை நீர்

flax seeds

Image Source : Healthline

இதையும் படிக்க: குழந்தைக்கு தரும் லன்ச் பாக்ஸ் உணவுகளுக்கான 21 ரூல்ஸ்…

ஆளிவிதைகளை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இளஞ்சூடான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆளிவிதை பொடி சேர்த்துக் கலக்கி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதனால், மலம் மூலமாக கழிவுகள் வெளியேறிவிடும்.

மோர், ஜூஸ், ஸ்மூத்தி இவற்றிலும் இதை சேர்த்துக் குடிக்கலாம்.

48 நாட்களிலே பலன் தெரியும்.

தண்ணீர்

சிம்பிளான தீர்வு இது.

சிறுநீரகங்கள், ரத்தம் ஆகியவற்றை சுத்தம் செய்து சிறுநீர் வழியாக அசுத்தங்களை வெளியே அனுப்பிவிடும்.

ஆயுர்வேதத்தின் படி, காப்பர் பாத்திரத்தில் உள்ள நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும். வெறும் வயிற்றில், காப்பர் பாத்திர நீரை லேசாக சூடாக்கி குடிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

கல்லீரலை நச்சுகளின்றி பாதுகாக்கும்.

மஞ்சள் தூள்

அரை டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து இரவில் குடித்து வருவது நல்லது.

பால், ஆர்கானிக் பாலாக இருப்பது நலம்.

மஞ்சள் தூள் கலந்த உணவுகள் எல்லாமே உடலுக்கு நல்லதையே செய்யும்.

கோதுமை புல் ஜூஸ்

கோதுமை புல் ஜூஸ் குடித்து வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

அந்த அளவுக்கு பவர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் கொண்டது.

கல்லீரலை சுத்தம் செய்யும்.

ரத்தசோகையை முற்றிலுமாக விரட்டும்.

இதையும் படிக்க: கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

Bigg boss 6 தமிழில் கலந்து கொண்டவர்களின் சம்பளம் இவ்வளவா??? (வயது, சம்பளம் and more)

tamiltips

அடடே நாடோடிகள் சசிகுமார் தங்கச்சி அபிநயாவா இது? ஆளே மாறி இப்போ எப்படி இருக்கார் பாருங்க…!!

tamiltips

வெள்ளை படுதல் குணமாக வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…

tamiltips

குக்கரில் செய்யக்கூடிய 3 வகை ஹோம்மேட் பிஸ்கெட் ரெசிபி…

tamiltips

நடிகர் வடிவேலுவின் அழகான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? இதோ அழகிய குடும்ப புகைப்படங்கள்..!!

tamiltips

ம றைந்த நடிகை சித்ராவிற்கு இப்படி ஒரு மோ சமான பழக்கம் உள்ளதா? போ லீஸ் வி சாரணையில் வெளிவந்த தி டுக்கிடும் தகவல்..!!

tamiltips