ஸ்மார்ட் போனை பயன்படுத்துவது தவறில்லை, ஆனால் அதை முறையாக பயன்படுத்துவது மிகவும் முக்கியம் குறிப்பாக ப்ரைட்னஸ் பொறுத்த வரை நேரத்திற்கு ஏற்ப வைத்து உபயோகிக்க வேண்டும்.
தைவானை சேர்ந்த சென் என்ற 25 வயது நிறைந்த பெண்ணின் கண்களில் சுமார் 500 ஓட்டைகள் இருப்பதாக சமீபத்தில் நடந்த மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது இதற்கு. காரணம் அந்த பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது ஸ்மார்ட் போனில் முழு ப்ரைட்னஸ் வைத்து உபயோகப்படுத்தியது தான் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சென் அவளது கண்கள் மீது 600 க்கும் மேற்பட்ட லுமென்ஸை வெளிப்படுத்தி கொண்டதால் விழி வெண்படலத்தில் 500 ஓட்டைகள் ஏற்பட்டதடாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தும் பயனர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக குறைந்தபட்சம் 47 முறை அவர்களது ஸ்மார்ட் போனை எடுத்து பார்க்கின்றனர் என்று நடந்து முடிந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் குறைந்த பட்ச மதிப்பீடு என்று இந்த ஆய்வு தெரிவித்து உள்ளது. மேலும் இளம் வயதினர் இந்த மதிப்பை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக ஸ்மார்ட் போனை உபயோகப்படுத்துவதாக அந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரி நாம் எந்த அளவிற்கு போன்களுக்கு அடிமையாகியுள்ளோம் என்று மிகவும் தெளிவாக தெரிகிறது.
இந்த பிரச்னையிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை என்றாலும் ஒரு அளவுக்கு இதில் இருந்து தப்ப்பித்து கொள்ள முடியும். அவற்றை இப்போது பார்க்கலாம் ..
ஸ்மார்ட் போனில் நாம் அனைவருமே முழு பிரைட்னஸ் வைத்து பயன்படுத்துவதை முதலில் தவிர்க்க வேண்டும் அதற்கு பதிலாக நமது மொபைலில் உள்ள ஆட்டோ பிரைட்னஸ் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதை பயன்படுத்தும் போது நமது வெளிப்புறத்தின் வெளிச்சத்திற்கேற்ப போனின் வெளிச்சமும் வேறுபடும். குறிப்பாக இரவு நேரத்தில் நாம் குறைவான பிரைட்னஸ்-ஐ வைத்து தான் ஸ்மார்ட் போனை பயன்படுத்த வேண்டும்.
இனி எந்த ஒரு எலக்ட்ரானிக் சம்மந்தப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்தும் போதும் நாம் மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.