பழங்கால முதலாக சிறந்த அழகு பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருவது தான் சந்தனம். இந்த சந்தனம் ஒருவரது சரும பிரச்சினைகளை போக்குவதோடு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் உதவும். சந்தனத்தில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகளுடன் ப்ளீச்சிங் பொருட்களும் அடங்கியுள்ளது. இதனால்தான் இது சருமத்தில் உள்ள கருமையை போக்குவதில் சிறந்ததாக கருதப்படுகிறது. சந்தனக் கலவை கருமையை மட்டுமின்றி முகத்திலுள்ள பருக்களையும் மறைய செய்யும்.
இந்த சந்தனத்தை கொண்டு பலவாறு பேஸ் மாஸ்க்குகளை வீட்டிலேயே தயாரிக்கலாம். இந்த பேஸ் பேக்குகளை ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை தவறாமல் பயன்படுத்தி வந்தால் சரும கருமை மட்டுமின்றி சரும பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
சந்தனத்துடன் எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய், கற்றாழை ஜெல், தக்காளி சாறு, ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை தனித்தனியே கலந்து பேஸ் பேக் தயாரிக்கலாம்.