ஜான் ஆர்.வாட்ரெட் (@ERAUWatret) என்பவர் கடந்த மாதம், லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து, அட்லாண்டாவுக்கு, விமானத்தில் பயணம் செய்துள்ளார். அந்த விமானத்தை இயக்கிய 2 பேரும், பெண்களாக இருந்துள்ளனர். அது மட்டுமின்றி, அவர்கள் 2 பேரும் தாய்-மகள் என்று, சக பயணிகள் பேசுவதை, வாட்ரெட் கவனித்துள்ளார். இதைக் கேட்டதும், வாட்ரெட் பெரும் வியப்படைந்துள்ளார்.
ஏனெனில், வாட்ரெட் ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரிங் பல்கலைக்கழகம் ஒன்றின் வேந்தராக பணிபுரிகிறார். உடனடியாக, அந்த பெண் விமானிகளை, பாராட்ட முடிவு செய்தார். அவர்களின் அனுமதியுடன், காக்பிட் பகுதிக்குள் சென்ற, வாட்ரெட், இருவரையும் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை, இளம் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணம் என்ற பெயரில், தனது ட்விட்டர் பக்கத்தில், வாட்ரெட், பகிர, தற்போது இப்படம், உலகம் முழுக்க வைரலாகி வருகிறது. இதுவரை, 18,000க்கும் அதிகமான ரீட்வீட்கள், 51,000க்கும் மேற்பட்ட லைக்குகளை இந்த புகைப்படம் பெற்றுள்ளது. பைலட் வேலை என்பது மிகக் கடினமானதாகும். இதில், தாயும், மகளும் ஒன்றாகப் பணிபுரிவது பாராட்டப்பட வேண்டிய விசயம் என, பலரும் ட்விட்டரில் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.