தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் பல ஆண்டுகளாக நடித்து பிரபலமானவர் நடிகை நீமிலா ராணி. தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் “தம்”, “பிரியசகி”, “திமிரு”, “மொழி”, “நான் மகான் அல்ல”, “குற்றம் 23”, “சத்ரு”, “சக்ரா” உள்ளிட்ட பல படங்களில் தோழி, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடையே பரிச்சியமானவர்.
மேலும் தொலைக்காட்சி சீரியல்களில் வில்லியாக நடித்து அனைத்து மக்களை ஈர்த்தார். சமீபத்தில் நடிகை ஷகிலாவின் மகள் மிளா எடுத்த பேட்டியொன்றில் தன்னுடைய ஆதங்கமாக சூழ்நிலையை பகிர்ந்துள்ளார் நீலிமா ராணி. தன் கணவர் பற்றி அனைவருக்கும் தெரியும் அப்படி இருந்தும் அவர் உங்க அப்பாவா என கேட்பார்கள்.
மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மேலும், என் கணவரை நான் விடாமல் காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன். 12 வயது வித்தியாசமான அவரை கல்யாணம் பண்ணதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் இப்போது எனக்கு 35 அவருக்கு 46 வயசாகிறது, மக்கள் கூறிவது காசுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டா வயசகூட பாக்காமா என்று கூசாமல் பேசுராங்க. 13 வருஷமா என் கணவரை காதலித்து வருகிறேன். வாய்க்கூசாம இப்படி மக்கள் பேசுவது ஏன்? என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார் நடிகை நீலிமா ராணி என்பது குறிப்பிடத்தக்கது.