விவசாயியின் மகள் ஜெயஸ்ரீ சோலங்கி. விவசாயக் குடும்பத்துக்கே உரிய வறுமை அவர்களது குடும்பத்தையும் வாட்டாமல் இல்லை. எனினும் நன்றாகப படித்து பெரிய வேலைக்குச் சென்று பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்ற கனவோடு படித்தார் ஜெயஸ்ரீ மாஸ்டர் டிகிரியை முடிக்கப் போகும் தருவாயில் வாழ்க்கையுடன் விதியும் போட்டி போட்டுக்கொண்டு ஜெயஸ்ரீயுடன் விளையாடியது.
கடந்த அக்டோபர் மாதம் செமெஸ்டர் தேர்விற்காக படித்துக்கொண்டிருந்த ஜெயஸ்ரீக்கு உடல்நலம் குன்றியது. சோர்வு, காய்ச்சல், முகத்தில் கரும்புள்ளிகள் என அவதிப்பட்ட ஜெயஸ்ரீயை பெற்றோர் மருத்துவமனைய்க்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் ஜெயஸ்ரீ கல்லூரிக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரத்தத்தை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை செயல் இழப்பதால் ஏற்படும் இரத்தசோகை வகை நோயான அப்ளாஸ்டிக் அனிமியா நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த மாற்று சிகிச்சையும், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையும் செய்துகொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சிகிச்சைக்கு சுமார் 17 லட்சம் ரூபாய் தேவைப்படும் நிலையில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் வருமானம் உடைய ஜெயஸ்ரீயின் தந்தைக்கு அது சாத்தியமற்ற தொகையாக உள்ளது. தனது தண்டுவடத்தில் இருந்து எலும்பு மஜ்ஜை செல்களை ஜெயஸ்ரீக்கு தானம் செய்ய காத்திருக்கும் அவரது சகோதரர், ஜெயஸ்ரீயின் தற்போதைய மருத்துவச்செலவுகளுக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
எப்போதும் தன்னை நினைத்து அழுது கொண்டிருக்கும் தன் தாயாருக்கு ஆறுதல் சொல்லி வருவதாகக் கூறும் ஜெயஸ்ரீ, சிகிச்சை முடிந்து குணமடைந்தால் தன்னால் தனது படிப்பை முடித்து தனது குடும்பத்தை சிறப்பாக காப்பாற்றும் கனவை நிறைவேற்ற முடியும் என்கிறார். அவர்களுக்கு துணையாக நிதி திரட்டும் இணையதளமான ‘Ketto’ வும் துணை நிற்கிறது. கெட்டோவுடன் சேர்ந்து, உதவிக் கரம் நீட்டுவோர் ஜெயஸ்ரீக்கு புது வாழ்வு அளிக்க துணை நிற்க முடியும்
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.