வழக்கமாக, கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ளவர்களை, கஞ்சா குடிக்கி என பகடி பேசும் சமூகத்தில், ஹார்வர்டு கல்வி நிறுவனத்தின் இந்த தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி,
உலக அளவில் கஞ்சா குடிப்பவர்கள் வலம் வருகின்றனர். அதேசமயம், சிகரெட் குடிப்பவர்களும் அதிகம் உள்ளனர். இதில், சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, விந்து எண்ணிக்கை குறையும் என ஆய்வு முடிவுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கஞ்சா குடிப்பவர்களின் உடல்நலம் பற்றி பெரிதும் ஆய்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில், இதுபற்றி ஹார்வர்டு கல்வி நிறுவன குழு ஒன்று ஆய்வு நடத்தி, மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்காக, கடந்த 17 ஆண்டுகால அளவில், 600க்கும் அதிகமான ஆண்களிடம் இருந்து விந்து மாதிரிகளை சேகரித்து, அவற்றை இந்த குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அதில், கஞ்சா குடிப்பவர்களுக்கு விந்து எண்ணிக்கை அதிகமாகவும், சிகரெட் குடிப்பவர்களுக்கு அது குறைவாகவும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுமட்டுமின்றி, கஞ்சா குடிப்பவர்களுக்கு, டெஸ்டோஸ்டீரான் அதிக அளவில் சுரக்கும் என்றும் நிரூபணமாகியுள்ளது. இதனால், அவர்கள் விபரீதமான செயல்கள் பலவற்றை அசால்டாக செய்யக் கூடிய நபர்கள் ஆவர்.
அதனால், அவர்களிடம் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எதுவும் அளவுடன்
இருந்தால் தான் பலன் கிடைக்கும். ஆண்மை அதிகரிக்க வேண்டும் என்று கஞ்சா
பழக்கத்திற்கு அடிமையானல் விபரீத விளைவுகள் வாழ்க்கையில் ஏற்படும் என்பதையும்
புரிந்து கொள்ள வேண்டும்.