ஆஞ்சியோகிராம் பரிசோதனை
ரத்தக் குழாயில் ஏற்பட்டு உள்ள அடைப்புகள், சுருக்கங்கள் மற்றும் அவற்றின் நீளம் ஆகியவற்றைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம் இப்போது நவீன பரிசோதனையாக கருதப்படுகிறது,
கை அல்லது தொடைப்பகுதியில் இருக்கும் ரத்தக் குழாய் வழியாக, சோதனைக் குழாயைச் செலுத்தி, இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் எக்ஸ்–ரே உதவியுடன் படம் பிடிக்கப்படுகின்றன. தற்போது குறைந்த செலவில் பின்விளைவுகள் இல்லாத வகையில் அனைத்துத் தரப்பினருக்கும் செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையை மேற்கொண்டவர்கள் நான்கு மணி நேர ஓய்வுக்குப் பிறகு வீடு திரும்பலாம்.
நியூக்ளியர் ஸ்கேன்
இதய நோயாளிகளுக்குக் கதிரியக்கம் உள்ள ரசாயனப் பொருட்களைக் கொடுத்து பரிசோதனை செய்யப்படும்.
இதன் மூலம் இதயத் தசைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறியலாம். பழுதடைந்த தசைகளையும் நல்ல நிலையில் இயங்கும் தசைகளையும் பிரித்து அறியவும் முடியும். ரத்தக் குழாய் அடைப்பால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதையும் கண்டுபிடித்துவிடலாம்.