· .நல்லெண்ணெயில் இருக்கும் லெசித்தின் ரத்தத்தில் உள்ள
அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது. லினோலிக் அமிலம் ரத்தத்தில் இருக்கவேண்டிய
நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
·
இதில் உள்ள துத்தநாகம் எலும்புகளை பலப்படுத்துகிறது.
தாமிரம், கால்சியம், மெக்னீசியம் மன அழுத்தத்தை போக்குகின்றன.
·
வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து
குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும்.
·
ஒரு கரண்டி எண்ணெய்யை வாயில் ஊற்றி நன்றாக நுரைவர கொப்பளித்து
துப்பும் ஆயில் புல்லிங் காரணமாக பற்களும் ஈறும் பலப்படும்.
வெண்புள்ளிக்கு கவலை வேண்டாம்
வேப்பிலை போதும்
தமிழகத்தில் வேப்பமரத்தை
கடவுளின் வரமாக கொண்டாடுகிறார்கள், ஏனென்றால் இதன் ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்குப்
பயன் தரக்கூடியது.
·
வேப்பிலையை வெந்நீரில் ஊறவைத்து குளித்துவந்தால் சருமத்தில் பளபளப்பு அதிகரிக்கும்.
முகப்பரு மற்றும் வெண்புள்ளிகள் நீங்கிவிடும்.
·
வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து வாரம் ஒரு நாள் குடித்துவந்தால் வயிறு சம்பந்தப்பட்ட
அத்தனை பிரச்னைகளும் தீரும்.
·
வேப்பிலையை தலையணையாக செய்து தலைக்கு வைத்துபடுத்தால் பொடுகு, பேன், முடி உதிரதல்
போன்ற பிரச்னைகள் தீரும்.
·
புண், காயம், அம்மை போன்ற நோய்களுக்கு வேப்பிலையை அரைத்துப் பூசினால் இதமாக
இருக்கும். நோய்த் தொற்று ஏற்படாது.
குடலில்
புழு தொல்லையா? விரட்டிவிடும் சுண்டக்காய்
சுண்டக்காயைப் பார்த்தாலே முகம்
திருப்பும் பலர், அதில் இருக்கும் மருத்துவக்குணங்களை அறிந்தால் ஆச்சர்யம்
அடைவார்கள்.
·
வயிற்றில் உள்ள அமீபா போன்ற கிருமிகளையும் குடல் புழுக்களையும்
விரட்டும் கசப்புத்தன்மை சுண்டைக்காய்க்கு உண்டு.
·
சுண்டக்காயின் கசப்புத்தன்மை ஊட்டச்சத்தாக மாறி
கல்லீரல், கணையம் போன்றவற்றை பாதுகாக்கிறது.
·
இந்தக் காயில் உள்ள புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை காரணமாக ரத்தம் சுத்தமடைகிறது. நரம்புகள் சுறுசுறுப்பாகிறது.
·
மார்புச்சளி, சுவாசக்குறைபாடு நீங்குவதுடன் நீரிழிவால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடல்சோர்வும் நீங்கும்.