Tamil Tips
குழந்தை பிரசவத்திற்கு பின் பெற்றோர்

குழந்தைகளின் கண் பார்வை வளம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

குழந்தைகளின் கண் பார்வை வளம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? (What are the foods to be taken for good eyesight?)

குழந்தைகளின் கண் பார்வையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது பெற்றோர்களின் கடமை!ஒரு குழந்தையின் கண்களில் தெரியும் ஆரோக்கியம் அவன் உடல்ரீதியாக  எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதைப் பிரதிபலிக்கிறது. குழந்தைகளின் பார்வை நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறதா என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பார்வைக் குறைபாடுகள் (Bad Eyesight)

இன்று குழந்தைகளுக்குப் பல கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. சிறு வயதிலேயே அவர்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். இதனால் அவர்களால் சரியாகப் படிக்க முடியாமலும், வகுப்பில் கவனம் செலுத்த முடியாமலும் தவிக்கின்றனர்.மேலும் அவர்களால் மற்ற குழந்தைகளைப் போல விளையாட முடியாமலும் போகிறது.கண்ணாடி உட்படப் பல மருத்துவ தீர்வுகள் கண் பார்வை பிரச்சனைக்கு இருந்தாலும் வரும் முன் காப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்

மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி பிறந்த குழந்தைகளுக்குக் கூட அறுவைசிகிச்சை செய்து நல்ல கண் பார்வையைத் தர வாய்ப்பளிக்கிறது. எனினும்,நாம் நம் குழந்தைகளுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட விட்டு விடக்கூடாது.இன்று 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கூடக் கண்ணாடி அணிந்து கொண்டு சிரமப்படுவதைக் காணும் போது பெரும் வேதனையாக உள்ளது.

Thirukkural

குழந்தைகள் கண் பார்வை பிரச்சனைக்கான காரணங்கள் (Reasons for Poor Eyesight in Kids in Tamil)

குழந்தைகளுக்குக் கண் பார்வையில் பிரச்சனைகள் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன.அவை பின் வருமாறு,

  • தொலைக்காட்சியின் அருகில் அமர்ந்து படம் பார்ப்பது. விளையாட்டு போன்ற செயல் திறன்களில் ஈடுபடாமல் வெகு நேரம் திரையின் முன்னே கதி என்று இருப்பது.
  • இரவு தாமதமாகத் தூங்குவது.அதனால் கண்களுக்குத் தேவையான ஓய்வு கிடைப்பதில்லை.
  • அதிகம் கைப்பேசி உபயோகித்து படம் பார்ப்பது.அதில் பல்வேறு விதமான விளையாட்டுக்களைப் பதிவு இறக்கம் செய்து சதா விளையாடிக் கொண்டே இருப்பது.
  • எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் உங்கள் குழந்தை சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளாதது.அதனால் உரிய ஊட்டச்சத்துகள் கண்களுக்குக் கிட்டுவதில்லை.
  • மரபு ரீதியான பிரச்சனைகளும் இந்த பாதிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

குழந்தைகள் கண் பார்வை வளம் பெறச் சாப்பிட ஏற்ற 12 உணவுகள் (12 foods which Increase Eyesight of Your Kids in Tamil)

எப்போதும் உங்கள் குழந்தையின் உணவுப் பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் உங்கள் குழந்தைக்கு நல்ல கண் பார்வை கிடைப்பதற்கான உணவுகளை நீங்கள் தருகிறீர்களா என்று உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம். அப்படிச் செய்தால், அனேக கண் பார்வை பிரச்சனைகளைத் தவிர்ப்பதோடு, உங்கள் குழந்தைகள் பெரியவர்களானாலும் நல்ல ஆரோக்கியமான பார்வையோடு இருப்பார்கள்.

நீங்கள் தெரிந்து கொள்ளவும் உங்கள் குழந்தைக்குச் சத்தான உணவைத் தரவும், இங்கே சில உணவுகளின் பட்டியல் உங்களுக்காக,

1. முட்டை (Eggs)

முட்டையில் இருக்கும் ஜின்ங்க் மற்றும் லுடீன் போன்ற சத்துக்கள் கண் குறைபாடு ஏற்படாமல் பெரிதளவு காக்கிறது.முட்டைக் கருவில் உள்ள ‘ஸிக்ஸாந்தின்’ புற ஊதா கதிர் வீச்சின் பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.இதனால் உங்கள் கண் பார்வை ஆரோக்கியமாகிறது.

2. மீன் (Fish)

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு மிகவும் தேவையானது. இது ரெடினாவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவும்.கூடுதலாகக் கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கிறது.பல வகையான கடல் மீன்களில் இந்த  சத்து உட்படப் பல உயிர்ச்சத்துகள் நிறைந்து உள்ளன.குறிப்பாக சால்மன்,டுனா,மேக்கிரல்,ட்ராவுட் போன்ற மீன் ரகங்களைக் கூறலாம்.

3. கீரை வகைகள் (Leafy Greens)

பச்சைக் கீரை வகைகளில் அதிகம் உயிர்ச்சத்து சி மற்றும் இ சத்து நிறைந்துள்ளன. மேலும் இதில் கரோட்டினாய்டுகள்  மற்றும் லியூடீன் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை,பசலை,புதினா,பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இதனால் இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் நீண்ட கால கண் நோய்களை வரவிடாமல் தடுக்கவும் குணப்படுத்தவும் முடிகிறது.

4. ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கள் (Orange Colored Fruits/Vegetables)

மாம்பழம், ஆரஞ்சு, காரட்,எலுமிச்சை போன்ற பழங்களில் அதிக ஊட்டச்சத்து ஏ  நிறைந்துள்ளது. இதனால் இரவில் பார்வை பிரகாசமாகத் தெரியும். மேலும் இந்தப் பழங்களில் உயிர்ச்சத்து சி நிறைந்துள்ளதால் கண்களோடு இணைந்திருக்கும் மற்ற தசைகளும் சத்து பெறும்.தினம் பச்சையாக ஒரு காரட்டை உண்பதால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

5. சூரிய காந்தி விதைகள் (Sunflower Seeds)

இதில் நிரம்பியுள்ள ஊட்டச்சத்து இ மற்றும் ஜிங்க் கண் கோளாறு வராமல் தவிர்க்க உதவுகின்றன.இவை பல்வேறு கடைகளில் விற்பனையாகி வருகின்றன.வாங்கி பலன் அடையலாம்.

6. நாவல்பழம் மற்றும் திராட்சைப்பழம் (Blueberries /Grapes)

நாவல் பழம் மற்றும் திரட்சைப்பழங்களில் ஆந்தோசையனின் அதிகம் உள்ளதால் இரவு நேரத்திலும்,இருட்டாக இருக்கும் இடங்களிலும் உங்கள் கண்கள் நன்றாகப் பார்வைப் பெற உதவும். இது கண் சோர்வைக் குறைக்கும்.ரெட்டினா சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் இந்தப் பழங்களில் குரோசிடின், ரெஸ்வெராட்ரால், செலினியம் மற்றும் ஜின்க் அதிக அளவில் இருப்பதால் உங்கள் கண்கள் நல்ல ஆரோக்கியம் பெரும்.

7. முட்டைகோஸ் (Cabbage)

கண் பார்வைக் கோளாறுகளைக் குணப்படுத்த முட்டைகோஸை அதிகம் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.குறிப்பாகச் சிவப்பு முட்டைகோஸ் கண் பார்வை வளத்திற்குப் பெரிதும் துணைபுரிகிறது. இதில் உயிர்ச்சத்து சி மற்றும் உயிர்ச்சத்து இ அதிகம் உள்ளதால் உங்கள் கண் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.

8. பூக்கோசு (Cauliflower)

இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கண் பார்வைக்கு மிகவும் உகந்தது.

ஆக இதை உணவில் அடிக்கடி சேர்ப்பது நன்மைப் பயக்கும். பொதுவாகவே குழந்தைகள் பூக்கோசை விரும்பி உண்பார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

9. சர்க்கரை வள்ளிக் கிழங்கு (Sweet Potatoes)

இதில் பீடாகரோடின் மற்றும் ஊட்டச்சத்து ஈ நிறைந்துள்ளன.இதை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்வதாலும் கண் பார்வை மேம்படும்.

10. பால் பொருட்கள் (Milk Products)

பால்,வெண்ணெய்,தயிர்,நெய்,பன்னீர் என்று அனைத்திலுமே ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது.இவற்றை போதிய அளவு உணவில் எடுத்துக் கொள்வதால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

11. தண்ணீர் (Water)

தண்ணீர் என்பது வளமான கண் பார்வைக்கு இன்றியமையாதது.

பல்வேறு கண் கோளாறுக்குக் கண்களின் ஈரப்பதம் குன்றுவதே காரணம்.இதைத் தவிர்க்க போதிய தண்ணீர் அருந்த வேண்டும்.

அதாவது தினம் 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது உகந்தது.

12.கொட்டை மற்றும் பருப்பு வகைகள் (Nuts and pulses)

முந்திரி, பாதாம் போன்ற சில கொட்டை வகைகளில் அதிகம் உயிர்ச்சத்து இ சத்து நிறைந்துள்ளதால் உங்கள் குழந்தையின் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். பட்டாணி,மொச்சை மற்றும் அவரைக் கொட்டைகளில் பையோபிலவோனாய்ட் மற்றும் ஜிங்க் நிறைந்து உள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த உணவுகள் மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு மற்ற உணவு வகைகளையும் அதிகம் கொடுக்கலாம். நாட்டுக் கோழி, ஆட்டிறைச்சி, ஆற்று மீன்கள் என்று நல்ல சத்து நிறைந்த உணவைத் தரலாம். மேலும் பசும் பால், பாரம்பரிய அரிசி வகைகள், உதாரணத்திற்குக் குதிரைவாலி, சாமை, திணை, வரகு, கைக்குத்தல் அரிசி என்று பல வகை அரிசி வகைகளையும் நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பாரம்பரிய பருப்பு மற்றும் அரிசி வகைகள் அதிக சத்துக்கள் நிறைந்தது.

இதனோடு நீங்கள்  துரித உணவுகள், நொறுக்கு தீனிகள் மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இவை உங்கள் குழந்தையின் உடல் எடையை அதிகரிப்பதோடு அவர்களின் கண் பார்வையையும் பாதிக்கக்கூடும். மேலும் சரியான அளவு மற்றும் சரியான நேரத்தில் நன்கு பசி எடுத்தவுடன் உங்கள் குழந்தைகள் உண்கிறார்களா? என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகளின் துணிகளை இப்படி பராமரித்தால் கிருமிகள் தாக்காது..! 21 வழிகள்

tamiltips

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய 10 பண்புகள்

tamiltips

கருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பது எப்படி?

tamiltips

குழந்தைக்கு வரும் விக்கலை எப்படி சரிசெய்வது? தவிர்க்கும் வழிகள்…

tamiltips

குழந்தைகளை ஈஸியான முறையில் தூங்க வைக்க டிப்ஸ்…

tamiltips

குழந்தைகளுக்கான பல் வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

tamiltips