Tamil Tips
குழந்தை பெற்றோர்

6 – 9 மாத குழந்தைகளுக்கான 15 கூழ் (Puree Recipes) ரெசிபி வகைகள்

குழந்தைகாக நீங்கள் முதல் முறையாக சமைக்க போகிறீர்களா அதற்கு நீங்கள் சமையல் கலை நிபுணராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில் இது குழந்தைகளுக்கான முதல் உணவு (Puree Recipes). இவற்றை செய்வது மிகவும் எளிது. நேரமும் குறைவு. சில நிமிடங்களில் ஆரோக்கியமான உணவை வீட்டிலே செய்து விடலாம்.

உங்கள் குழந்தை திட உணவுக்குத் தயாராகி விட்டதா?

(Is Your Baby Ready for Solids?)

உங்களின் குழந்தைக்கு திட உணவு அல்லது முதல் உணவு கொடுக்க 6 மாதம் முடியும் வரை காத்திருக்க சொல்கிறது, அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ். ஆனால், உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் சில மாற்றங்கள் தெரிந்தால், திட உணவை 4-வது மாதத்திலிருந்தே கொடுத்து பழகலாம் என்கிறது இந்த அகாடமி.

  • 4-வது மாதத்திலே திட உணவை உண்ணும் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் வரும் வாய்ப்பு குறையும்.
  • குழந்தை நேராக உட்கார்ந்து தலையை தூக்கி திட உணவை சாப்பிடும் ஆர்வத்தைக் காட்டினாலே போதும். திட உணவைச் சாப்பிட குழந்தை தயார் என அர்த்தம்.
  • குழந்தைகள் நல மருத்துவர் திட உணவைக் கொடுக்கலாம் என்று சொன்ன உடனே நீங்கள் உங்கள் குழந்தைக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்து விடலாம்.

கவனிக்க வேண்டியவை

புதிதாக ஒரு சுவையை நாம் திட உணவாகக் கொடுக்கும்போது 1-2 டேபிள்ஸ்பூன் அளவுக்குதான் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த உணவு குழந்தைக்கு ஏற்றுக்கொள்கிறதா எனத் தெரியும்.

பொதுவாக அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகள் (சில குழந்தைகளுக்கு மட்டும்)

  • முட்டை
  • பால்
  • நட்ஸ்
  • கோதுமை
  • மீன்
  • சோயா
  • கடல் சிப்பி உணவு

இதையும் படிக்க: 6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

Thirukkural

6 – 9 மாத குழந்தைகளுக்கான முதல் உணவு (First food for Babies)

உங்கள் குழந்தை 4 மாதத்திலிருந்து சாப்பிட தொடங்கினால் அவர்களுக்கு கீழ் காணும் உணவுகளைக் கொடுக்கலாம்.

கூழ் ரெசிபி வகைகள்:

#1. பட்டாணி ப்யூரி (Green Peas Puree)

விட்டமின் ஏ, சி, இரும்புச் சத்து, புரதம், கால்சியம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. பட்டாணியில் தோல் இருப்பதால் முடிந்த அளவு அதை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

#2. கேரட் ப்யூரி (Carrot Puree)

பெரும்பாலான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு கேரட். ஏனெனில் இது இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. தோல் சீவி, கேரட்டை வேக வைத்து மசித்துக் கொடுக்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட், பீட்டா கரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ சத்துகள் நிரம்பியுள்ளன.

#3. பீட்ரூட் ப்யூரி (Beetroot Puree)

தோல் சீவி பீட்ரூட்டை சிறிதாக நறுக்கி, நன்கு வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். உடலில் ரத்தம் உற்பத்தியாக உதவும்.

இதையும் படிக்க: குழந்தையின் எடையை அதிகரிக்கும் நேந்திரம் பொடி செய்வது எப்படி?

#4. உருளைக்கிழங்கு ப்யூரி (Potato Puree)

நன்கு கழுவிய உருளைக்கிழங்கைத் தண்ணீரில் போட்டு குக்கரில் வேக விடவும். வெந்ததும் தோல் நீக்கி நன்கு மசித்துக் கொடுக்கலாம். ஆரோக்கியமான முறையில் குழந்தையின் எடை கூட உதவும். நீண்ட நேரம் பசி தாங்கும்.

#5. சர்க்கரைவள்ளி கிழங்கு ப்யூரி (Sweet Potato Puree)

நன்கு கழுவிய சர்க்கரைவள்ளி கிழங்கைத் தண்ணீரில் போட்டு குக்கரில் வேக விடவும். வெந்ததும் தோல் நீக்கி நன்கு மசித்துக் கொடுக்கலாம். ஆரோக்கியமான முறையில் குழந்தையின் எடைகூட உதவும். தோலுக்கு நல்லது. முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான சத்துமாவு – ஹோம்மேட் செர்லாக் (3 வகை) தயாரிப்பது எப்படி?

#6. மிக்ஸ்ட் வெஜ் ப்யூரி (Mixed Veg Puree)

உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி ஆகியவற்றை வேகவைத்து நன்கு மசித்துக் கொடுக்கலாம். ஊட்டச்சத்துகள் நிறைந்தது.

#7. கைக்குத்தல் அரிசி ப்யூரி (Hand Pounded rice Puree)

கைக்குத்தல் அரிசியை 8 மணி நேரம் ஊறவைத்த பின் நன்கு வேக வைத்து மையாக மசித்துக் குழந்தைக்கு ஊட்டலாம். நுண்ணூட்ட சத்துகள் அனைத்தும் இதில் உள்ளது. அலர்ஜி ஏற்பட வாய்ப்பே இல்லை.

avacado puree

Image Source: speechfoodie.com

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி? 

#8. அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் (Avacado Puree)

பாதியாக அவகேடோவை நறுக்கி ஸ்பூனால் அதன் சதைப் பகுதியை எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பழுத்த அவகேடோவாக இருந்தால் க்ரீம் பதத்தில் வரும். ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்தது. உடல் எடைகூட உதவும். சருமம் ஆரோக்கியமாகும்.

#9. வாழைப்பழம் ப்யூரி (Banana Puree)

பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்த உணவு இது. ‘பர்ஃபெக்ட் உணவு’ என வாழைப்பழ ப்யூரியை சொல்லலாம். குழந்தைகளுக்கான சிறந்த உணவுகள் இதுவும் ஒன்று. மலச்சிக்கல் நீங்கும்.

#10. ஆப்பிள் ப்யூரி (Apple Puree)

ஆப்பிளை வேக வைத்து அதன் தோலை நீக்கி உள் சதைப் பகுதியை நன்கு மசித்துக் குழந்தைக்கு கொடுக்கலாம். இயற்கையான இனிப்பு சுவை இருப்பதால் குழந்தைக்கு பிடிக்கும். விட்டமின், தாதுக்கள் நிரம்பியது.

இதையும் படிக்க: 6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர்

#11. ஸ்டாபெர்ரி ப்யூரி (Strawberry Puree)

ஸ்டாபெர்ரி பழத்தில் உள்ள பச்சை காம்பை எடுத்து விட்டு, பழத்தை நன்கு அரைத்துக் கொள்ளவும். இதைக் குழந்தைக்கும் கொடுக்கலாம். விட்டமின் சி, ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட் நிரம்பியுள்ளதால் குழந்தைக்கு மிகவும் நல்லது.

#12. கிவி ப்யூரி (Kiwi Puree)

கிவி பழத்தின் நிறம் குழந்தைகளை ஈர்க்கவே செய்யும். தோல் நீக்கிய பின் கிவி பழத்தை எடுத்து அரைத்துக் கொள்ளவும். அதைக் குழந்தைக்கு கொடுக்கலாம். இதில் கொஞ்சமாக வாழைப்பழத்தை சேர்த்து மசித்துக் கொடுக்க குழந்தைக்கு நல்லது. மல்டி விட்டமின்கள் கிடைக்கும்.

puree-recipes

#13. கிர்ணி மற்றும் முலாம் பழம் ப்யூரி (Musk Melon Puree)

கிர்ணி அல்லது முலாம் பழத்தை அறிந்து அதன் விதைகளை நீக்கி சதைப்பகுதியை கரண்டியால் மசித்துக் கொள்ளவும். பழமாக இருப்பின் அப்படியே நசுக்கினால் கூழாகிவிடும். மிதமாக அளவு பழுத்திருந்தால் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். நீர்ச்சத்து, விட்டமின் சி நிறைந்துள்ளன.

இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

#14. மாம்பழம் ப்யூரி (Mango Puree)

பழுத்த சதைப் பகுதி, மிருதுவாக இருக்கின்ற பாகத்தை எடுத்து ஸ்பூனாலேயே நன்கு மசித்துக் கொள்ளவும். சருமம், முடி, கண்கள் ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது.

#15. பப்பாளி ப்யூரி (Papaya Puree)

பழுத்த பப்பாளியாக இருந்தால் முள் கரண்டியிலே நீங்கள் மசித்துக் கொள்ளலாம். செங்காயாக இருப்பின் தண்ணீரில் வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். விட்டமின் சி மிக அதிகம். பார்வைத் திறன் அதிகரிக்கும். சருமம் பொலிவடையும்.

இப்படி ஒரு பழம் அல்லது ஒரு காய்கறியை வைத்து செய்யும் கூழ் வகைகள் (Single fruit and vegetable puree) குழந்தைகளுக்கு மிக சிறந்த முதல் உணவு வகைகளாக அமையும்.

இதையும் படிக்க: 7 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை மற்றும் ரெசிபி

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…

tamiltips

ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப் தயாரிப்பது எப்படி?

tamiltips

தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 11 முக்கிய விஷயங்கள்…

tamiltips

ஃபீடிங் பாட்டில் சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் டிப்ஸ்…

tamiltips

தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும் இயற்கை வழிகள்… மல்லிப்பூ வைத்தியம் பலன் தருமா? டிப்ஸ்…

tamiltips

குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள்… எந்த கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்?

tamiltips