Tamil Tips
கருவுறுதல் கருவுறுவது எப்படி கர்ப்பமாவதற்கு திட்டமிடுதல் பெண்கள் நலன்

இயற்கையான முறையில் ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்வது எப்படி?

ஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால் மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வுகள் ரீதியாக பிரச்னைகள் வரும். ஒவ்வொரு ஹார்மோன் இயக்கத்துக்கான கெமிக்கல் மெசேஜ்களால் மனிதனது மனநிலை, பசி, எடை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எண்டோகிரைன் சுரப்பிகளால், உடலில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும். சத்தான உணவுகளும் ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கமும் ஹார்மோன்களை சீராக இயங்க வைக்க உதவும்.

இயற்கையான முறையில் ஹார்மோன்களை சீராக்குவது எப்படி?

தேவையான புரோட்டீன் சத்து இருப்பது.

ஒவ்வொரு முறை நீங்கள் சாப்பிடும் போது, புரோட்டீன் சத்து இருக்கின்ற உணவுகளைக் கட்டாயம் உங்களது மெனுவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பசியின்மை பிரச்னையை நீக்க உதவும்.

பசி உணர்வை இயக்க வைக்கும். ஹார்மோனை சரிவர இயங்க செய்ய புரோட்டீன் சத்து உதவும்.

Thirukkural

20-30 கிராம் அளவு புரோட்டீன் சத்து, ஒவ்வொரு முறையும் நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் இருக்க வேண்டும்.

அதிக பசி வந்து தொல்லை தராது. புரோட்டீன் சத்து இப்பிரச்னையை சீர் செய்யும்.

தொடர்ந்து உடற்பயிற்சி

இன்சுலின் அளவை சீராக சுரக்க வைக்க உடற்பயிற்சி செய்து வருவது நல்லது.

சர்க்கரை, அமினோ ஆசிட்களை சரியான அளவில் வைத்து, அதை எனர்ஜியாக மாற்ற உடற்பயிற்சி உதவும்.

24 வாரங்கள் உடல் எடை அதிகம் உள்ள பெண்கள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்திருக்கின்றனர். அவர்களைப் பரிசோதித்ததில் இன்சுலின் சுரப்பு சீராக இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்தனர்.

hormonal imbalance

சர்க்கரை, ரீஃபைன்ட் மாவுச்சத்து தவிர்

இது உடலில் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும்.

முக்கியமாக, உடல்பருமனாகி ஹார்மோன் பிரச்னையை அதிகரிக்க செய்யும்.

இன்சுலின் சுரப்பை பாதிக்க செய்யும்.

பிசிஓடி, பிசிஓஎஸ், உடல்பருமன், சர்க்கரை நோய், ப்ரீடயாபடிக் போன்ற நோய்கள் வருகின்றன.

ஸ்ட்ரெஸ் – தவிர்க்கவும் சமாளிக்கவும்

ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகமாக தூண்டினால் கட்டுப்படுத்த முடியாத மன உளைச்சலால் பாதிப்போம்.

அவசரமான வாழ்வியலில் ஸ்ட்ரெஸ் அதிகரிக்கதான் செய்யும். ஆனால், அதைப் போக்க முயற்சிப்பதே நல்லது.

ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரந்தால் உயர் ரத்த அழுத்தம், இதய துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பது, கவலை, பயம் போன்ற பாதிப்புகள் வரும்.

யோகா, தியானம், உடற்பயிற்சி, இசை போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.

இதையும் படிக்க: தாய்மார்களுக்கான ஸ்ட்ரெஸ்… விரட்ட சிம்பிள் வழிகள் இங்கே…

ஆரோக்கியமான கொழுப்பை மட்டும் சாப்பிடுவது

தேங்காய், நட்ஸ், தயிர், யோகர்ட், பால், விதைகள், செக்கில் தயாரித்த எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்பை மட்டுமே சாப்பிட வேண்டும்.

தேங்காயும் தேங்காய் எண்ணெயும் உடலுக்கு நல்லது. சருமத்துக்கு சிறந்தது.

எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிக்கப்படும் உணவுகள் நல்லதல்ல.

எண்ணெயை ஒருமுறை பயன்படுத்திய பின் மீண்டும் பயன்படுத்த கூடாது.

அதிகம் / குறைவாக சாப்பிடுவது

சிலர் எந்த நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள்.

மூன்று வேளை உணவு, இடையே நொறுக்கு தீனி என சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள்.

இதனால் உடல்பருமனாகி, ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும்.

மிக குறைவாக சாப்பிட்டால் போதுமான சத்துகள் கிடைக்காமல் போகும்.

ஒருநாளைக்கு 1200 கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிட்டால்தான் உடலுக்கு எனர்ஜி கிடைக்கும்.

இதையும் படிக்க: காபி, டீக்கு பதிலாகக் குடிக்க வேண்டிய 9 மூலிகை டீ, காபி மற்றும் பால்…

hormonal issues

காபி, டீ தவிர்

காபி, டீயில் கெஃபைன் அதிகம். இது உடல்நிலை மற்றும் மனநிலையைப் பாதிக்கும்.

இன்சுலின் அளவை சீராக சுரக்க வைப்பதில் மூலிகை டீ, கிரீன் டீ குடிப்பது நல்லது.

ஒரு நாளைக்கு 2 கப் அளவில் குடிப்பது உடலுக்கு ஏற்றது.

சர்க்கரை நோயாளிகள், உடல்பருமனானவர்கள் மூலிகை டீ, கிரீன் டீ குடிக்கும் பழக்கத்தில் இருக்க உடல்நலத்தில் முன்னேற்றம் தெரியும்.

ஹார்மோன்களை சீராக்க உதவும் நல்ல பழக்கங்கள்… உணவுகள்…

தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது. குறிப்பாக 10.30 மணிக்குள் தூங்கி விடுவது நல்லது.

காலை 6 மணிக்குள் எழுந்திருப்பது சிறப்பு.

பொரித்த மீன்களை உண்ண கூடாது. வறுத்த, வேக வைத்த மீன்களை சாப்பிடலாம்.

நார்ச்சத்து உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும். கீரைகள், காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து உள்ளது.

கோழி முட்டையை வாரம் 5 முறை சாப்பிடலாம். முடிந்த அளவு நாட்டு கோழி முட்டையை சாப்பிடுங்கள்.

துளசி தண்ணீர், துளசி டீ ஆகியவற்றை சாப்பிட்டால் ஸ்ட்ரெஸ் அளவு குறையும். ஹார்மோன் பிரச்னை மெல்ல சீராகும்.

அஷ்வகந்தா எனும் மூலிகையை உங்களது ஹெல்த் மிக்ஸ் பவுடரில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மாலை, காலை நேர சத்து மாவு கஞ்சியாக செய்து குடிக்கலாம். ஹார்மோன் பிரச்னை சீராகும்.

மூச்சு பயிற்சி செய்தாலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் தெரிய ஆரம்பிக்கும். ஹார்மோன்கள் சிறப்பாக இயங்கும்.

லாவண்டர் எண்ணெய், தைம் எண்ணெய், சந்தன எண்ணெய், ப்ரிம்ரோஸ் எண்ணெய் ஆகியவற்றை தினமும் ஒரு எண்ணெய் என வீட்டில் 5 சொட்டு அளவு தெளிக்கலாம். இதை சுவாசிக்கையில் மனதுக்கு அமைதி கிடைக்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் சீராகும்.

சூரியனிடமிருந்து விட்டமின் டி சத்துகளைப் பெற வேண்டும். நாள்தோறும் சூரிய வெயில் படும்படி 20 நிமிடங்கள் நிற்கலாம்.

தயிர், மோர், யோகர்ட் போன்ற ப்ரொபயாட்டிக் உணவுகளை சாப்பிடுவதால் வயிறு நலம் பெறும். இன்சுலின், கிரெலின், லெப்டின் ஆகிய ஹார்மோன்களின் சுரப்பு சீராக இருக்கும்.

கர்ப்பத்தடைக்காக மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டிருந்தால் அதைநிறுத்தி விடுங்கள். இவற்றால் ஹார்மோன்கள் பாதிக்கும். பாதுகாப்பான கர்ப்பத்தடைகளைப் பயன்படுத்தலாம். அதில், காண்டம் பாதுகாப்பானது.

பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்கும் உணவுகளை அவசியம் தவிருங்கள்.

இதையும் படிக்க: வலி இல்லாமல் இயற்கையான முறையில் தேவையற்ற முடிகளை நீக்கும் முறைகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் 9 வகை டீடாக்ஸ் டிரிங்க்ஸ் ரெசிபி…

tamiltips

எடை குறைவான குழந்தைகள் பிறப்பதற்கான 10 காரணங்கள்

tamiltips

குழந்தைக்கு 7 பாதிப்புகளை ஏற்படுத்தும் ரப்பர் நிப்பிள்… தீர்வு என்ன?

tamiltips

ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?

tamiltips

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் என்ன செய்ய கூடாது? என்னென்ன செய்யலாம்?

tamiltips

குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள்… எந்த கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்?

tamiltips