Tamil Tips
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பம் பெண்கள் நலன்

கர்ப்பகாலத்தில் கால் வீக்கம் ஏன் வருகிறது? வீக்கம் குறைய என்ன செய்யலாம்? 15 எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் பல பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கின்றனர். இதில் ஒரு குறிப்பிடத்தகுந்த பிரச்சனையாகக் கருதப்படுவது கர்ப்பிணிப் பெண்களின் கால் மற்றும் பாதங்களில் வீக்கம் அடைதல் ஆகும். கர்ப்பிணிப் பெண்ணின் கால் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்பட என்ன காரணம்? இது மாதிரி ஏற்படும் கால் வீக்கத்தை (Swollen feet during pregnancy) எப்படி சில எளிய வீட்டுக் குறிப்புகளைப் பயன்படுத்தி சரிசெய்து கொள்ளலாமென பார்க்கலாம்.

கர்ப்பிணிகளின் கால் வீக்கத்திற்கு என்ன காரணம்?

ஒரு பெண்ணின் உடல் அமைப்பு மிகவும் நுணக்கமானது. அவள் தாய்மை நிலைமையை எய்தியவுடன், அதாவது அவளது கருவறையில் ஒரு சிசு வளரத் தொடங்கியவுடன் அவளது உடல் இயக்க நிலைகளில் எக்கச்சக்க மாற்றங்கள் நிகழ்கின்றன. இது பொதுவாக எல்லோருக்கும் நடப்பதே.

இதுவரை அவளது உடல் செயல்பாட்டிற்கு மட்டுமே சுரந்து கொண்டிருந்த சுரப்பிகள் மற்றும் உற்பத்தியாகிக்கொண்டிருந்த இரத்த அளவுகள் என்று எல்லாமே மாறத் தொடங்கிவிடும். இந்த மாற்றங்கள் நிகழ்வதற்கான மைய காரணமே கருவில் வளரும் சிசு! ஆம்! கருவில் உள்ள குழந்தைக்கு எல்லா சத்துக்களும் சென்று சேர வேண்டும். அப்போது கரு சிறந்த முறையில் வளர்ச்சி அடைந்து முழு நிலையை எய்தும்.

இப்போது கால் வீக்கத்திற்கு வருவோம்! பொதுவாக ஒரு பெண்ணின் உடலில் உற்பத்தியாகும் இரத்தத்தின் அளவிலிருந்து 50% அதிக அளவு இரத்தம் கர்ப்பகாலத்தில் உற்பத்தி ஆகின்றது. இது தவிர உடலில் சுரக்கும் பல்வேறு திரவங்களின்(body fluids) அளவுகள் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக இரத்த ஓட்டத்தில் மாறுதல் ஏற்படுகின்றது. அதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகவே கர்ப்பிணிப் பெண்களின் கால் பாதங்களில் வீக்கம் ஏற்படுகின்றது.

இதையும் படிங்க: தைராய்டில் இருந்து எளிதில் விடுபட குறிப்புகள்

Thirukkural

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதையும் அறியலாம். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த எடை அதிகரிப்பாலும் கால் வீக்கம் ஏற்படும்.

கர்ப்ப காலத்தில், எப்போது கால் வீக்கம் ஏற்படுகிறது?

கால் வீக்கமானது கர்ப்ப காலத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். அதாவது கருத்தரித்த ஆரம்ப நாட்களிலிருந்து குழந்தை பிறக்கும் காலம் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த வீக்கம் வரலாம். எனினும் அதிகபட்சமான கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பிரச்சினையை தங்கள் ஐந்தாம் மாத கர்ப்பகாலத்தில் சந்திக்கத் தொடங்குகின்றனர். கடைசி ட்ரைமெஸ்டரில்(3ஆம்) இந்த வீக்கத்தின் தாக்கம் அதிகரிக்கின்றது. இந்த வீக்கமும் ஒரே அளவில் இருக்காது. சில சமயம் அதிகமாக இருக்கும் சில சமயம் மிகவும் குறைவாக இருக்கும். இதை மருத்துவ ரீதியாக எடிமா என்று அழைக்கின்றார்கள்.

கர்ப்பகால கால் வீக்கம் குறைய 15 குறிப்புகள்

எளிய வீட்டு வைத்தியக் குறிப்புகள் பின்வருமாறு.

தொடர்ச்சியாக நிற்க வேண்டாம்

கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ச்சியாக நிற்கும் பொழுது இரத்த ஓட்டம் சரியானபடி இருக்காது. அதனால் கால் வீக்கம் அதிகரிக்கும். இதனைத் தவிர்க்கக் கர்ப்பிணிப் பெண்கள் நெடுநேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

வெயிலில் செல்ல வேண்டாம்

வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரம், உதாரணமாக மதிய நேரம் வெளியில் செல்ல வேண்டாம்.

கால்களை உயர்த்தி வையுங்கள்

ஒரு நாளில் மூன்று நான்கு வேளைகளில் 15 நிமிடம் என்ற நேர அளவில் கால்களைத் தலையணைக்கு மேலே உயர்த்தி வைக்கலாம். இது ஒரு எளிமையான மற்றும் சிறந்த வழி.

சிறந்த காலணிகள்

சற்று மென்மையான ரகம் கொண்ட காலணிகளை அணிவது சிறந்தது. கடுமையான
ரக செருப்புகள் மற்றும் ஹீல்ஸ் வைத்த செருப்புகளை முற்றிலுமாகக் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.

நீச்சல்

நீச்சல் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சி. நீச்சல் அடிப்பதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். நீச்சல் பயிற்சி முறைப்படி கற்றறிந்த கர்ப்பிணிப் பெண்கள் நீச்சல் அடிக்கலாம். இதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்து கொள்ளலாம்.

தண்ணீர்

கர்ப்பிணிப் பெண்கள் போதிய தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்வது அவசியம். இவ்வாறு செய்யும் பொழுது உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகள் நீங்கும். கர்ப்பிணிப் பெண்களின் கால் வீக்கம் வடிய வாய்ப்பு உள்ளது.

உப்பின் அளவு

கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் உப்பின் அளவை மிகவும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் உணவில் அதிகபட்சமான உப்பைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு கட்டுப்பாடான அளவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளும் பொழுது, கர்ப்பிணிப் பெண்களின் இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கும். இதன் விளைவாக அவர்களின் கால் வீக்கம் குறையும்.

பொட்டாசியம்

கர்ப்பிணிப் பெண்களின் உடலில் அதிக அளவு ஊட்டச் சத்து தேவைப்படும். எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவும் அறிவும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம். ஊட்டச்சத்து பொட்டாசியத்தை போதிய அளவிற்கு உடலில் கிடைக்கச் செய்வதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்யலாம். வாழைப்பழம்,அவகேடோ அத்திப்பழம்,லீட்டாஸ்,செலரி,கிவி போன்ற பழங்களில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. தக்காளி,முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளிலும் இந்த சத்து நிறைந்துள்ளது. கீரை வகையான புதினாவிலும் பொட்டாசியம் உள்ளது.

கேஃபைன் வேண்டாம்

கர்ப்பிணிப் பெண்கள் காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் காபியில் நிறைந்துள்ள கேஃபைன் சிறு நீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும். இதனால் உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் உடலின் எலக்ட்ரோலைட் பேலன்ஸ் பாதிக்கப்படும். இதற்கு மாற்றாக மிளகு மற்றும் புதினா கலந்த தேநீரை அருந்தலாம். இது கர்ப்பிணிப் பெண்களின் கால் வீக்கத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

இடது பக்கமாகப் படுத்து உறங்கவும்

கர்ப்பிணிப் பெண்கள் படுக்கும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். நேராகப் படுப்பது அல்லது வலது பக்கமாகப் படுப்பதை விட இடது பக்கமாகப் படுப்பது சிறந்தது. இவ்வாறு படுப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீரான அளவில் இருக்கும். ஆகக் கால் வீக்கமும் குறையும்.

நடைப்பயிற்சி

கர்ப்பிணிப் பெண்கள் தினம் மாலை நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மாலை வேளை என்று இல்லை வீட்டில் இருக்கும் நேரத்திலும் அவ்வப்போது ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு நடப்பது நல்லது. இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சரியான அளவில் நடைபெறும். இதன் மூலம் நிச்சயம் கால் வீக்கம் குறையும்.

துரித உணவு வேண்டாம்

கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் உணவுகளையும் சாலையோரங்களில் மலிவான விலையில் கிடைக்கும் துரித உணவுகளையும் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும். இதில் அதிக அளவு எண்ணெய் மற்றும் உப்பும் சேர்த்து இருப்பார்கள். இது கால் வீக்கத்தை அதிகரிக்க செய்து விடும். ஆக இது போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்

எப்சம் சால்ட்

ஒரு அகண்ட பாத்திரத்தையோ அல்லது டப்பையோ எடுத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு எப்சம் சால்ட்டைக் கலந்து கொள்ளவும். இதில் தேவைப்பட்டால் சில சொட்டுகள் லேவண்டர் ரோசையும் கலந்து கொள்ளலாம். இதில் பெண்கள் தங்கள் கால்களை விட்டுக் கொள்ளலாம்.தினம் ஒரு 15 நிமிடங்கள் இதைச் செய்யலாம். இந்த எப்சம் சால்ட் தசை வலிகளை நீக்க உதவும்.இது கால் மற்றும் பாதங்களில் உள்ள நச்சுகளையும் கழிவுகளையும் நீக்கவல்லது.

மசாஜ் செய்யவும்

ஆர்னிகா எண்ணெயைப் பாதங்கள் மற்றும் கால்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்யலாம். இதன் மூலம் ரத்த ஓட்டம் சீர் அடையும்.கால் வீக்கம் வடியும்.

மெக்னீசியம்

மெக்னீசியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்குத் தோராயமாக 200-400 மில்லி கிராம் அளவு மெக்னீசியம் தங்கள் உடலில் சேரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பாதாம் பருப்புகள் முந்திரிப் பருப்புகள், ப்ராக்கோலி போன்ற உணவுகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளன. இந்த சத்தானது கால் வீக்கம் குறைய உதவுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து குறிப்புகளையும் பயன்படுத்தி கர்ப்பிணிப் பெண்கள் வீட்டிலேயே தங்கள் கால் வீக்கத்தைக் குறைக்க வழிவகை செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்க: வெயிலுக்கு இதமான 5 ஹெல்தி, டேஸ்டி சாலட்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

tamiltips

கோபம் வந்தால் இதையெல்லாம் செய்யுங்க… தாய்மார்களுக்கான டிப்ஸ்…

tamiltips

கண்ணாடி போன்ற சருமம்… தினமும் செய்ய வேண்டிய 3 ஸ்டெப் ஸ்கின் கேர்…

tamiltips

உடல் எடை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

tamiltips

வெறும் வயிற்றில் குடிக்க ஹெல்தியான 9 வகை டீ, காபி… பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும்…

tamiltips

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்க 10 சிறந்த வழிகள்!

tamiltips