இந்த 21 நாட்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளை முன்னதாகவே திட்டம் தீட்டி பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தி அமைத்துக் கொண்டால் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கலாம். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் எந்த பிரச்சனையும் இன்றி காத்துக் கொள்ளலாம்.
ஆன்லைன் பேமென்ட் :
கரண்ட் பில், போன் பில், வாட்டர் பில் ஆகியவற்றை செலுத்துவதற்கு நேரடியாக சொல்லாமல் ஆன்லைன் பேமென்ட் வசதியின் மூலமாக நம் வீட்டில் இருந்தபடியே அனைத்து பில்களையும் கட்டிக் கொள்ளலாம். இதன் மூலம் இந்த ஊரடங்கு உத்தரவு காலங்களில் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கலாம்.
ரொக்கப் பணம் கையிருப்பு:
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த காலங்களில் ஒரு சில சில்லரை வியாபாரிகள் கடைகள் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை விற்பதற்காக இயங்கும். அந்தக் கடைகளில் நாம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை பெரும்பாலும் பயன்படுத்த முடியாது. ஆகவே இந்த சமயங்களில் நாம் கையில் கொஞ்சம் பணத்தை ரொக்கமாக வைத்திருந்தால் அது நமக்கு பெரிதாக உதவும். இல்லை என்றால் ஒவ்வொரு முறையும் நாம் ஏடிஎம் செல்வதற்காக வீணாக வெளியே செல்ல வேண்டியிருக்கும்.
சமையல் பொருட்கள் இருப்பு:
இந்த மாதிரியான ஊரடங்கு கால கட்டங்களில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே இயங்கும். அதற்காக நாம் ஒவ்வொரு நாளும் சமையலுக்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு செல்லக்கூடாது. ஒருமுறை சென்று சுமார் ஒரு மாதத்திற்கு சமைத்து சாப்பிடுவதற்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்களை வாங்கி வீட்டில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு முன்னதாகவே திட்டமிடு வதன் மூலமாக நாம் அடிக்கடி வெளியே செல்லாமல் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
மருந்துப் பொருட்கள் இருப்பு:
வீட்டில் குழந்தைகளோ அல்லது பெரியவர்களோ இருந்தால் அவர்களுக்குத் தேவையான மருந்துகளை மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் முன்னதாகவே வாங்கி வைத்துக் கொண்டால் அவசர காலங்களில் வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கலாம்.
குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள்:
குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான diaper, milk powder போன்ற பொருட்களை ஒரு மாதத்திற்கு தேவையான அளவு நாம் வாங்கி வைத்துக் கொண்டால் அடிக்கடி நாம் வெளியே செல்வதை தவிர்க்கலாம்.
குப்பைகளை சேகரித்து வெளியேற்றுதல்:
ஊரடங்கு உத்தரவு காலகட்டங்களில் நாம் வீட்டிலே சேரும் குப்பைகளை ஒரு பெரிய பிளாஸ்டிக் அல்லாது பைகளில் நிரப்பிக் கொள்ளலாம். இதன் மூலம் பெரிய குப்பை பைகள் நிரம்பும் போது மட்டும் நாம் வெளியே சென்று குப்பைகளை கொட்டலாம். நாம் எப்போது வெளியே குப்பை கொட்ட செல்கிறோமோ அப்பொழுது கைகளை கழுவிக் கொண்டு நமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ஏதேனும் வாங்க வேண்டி இருப்பின் அதையும் கடைகளுக்குச் சென்று வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பலாம். இதன் மூலமாக வெளியே செல்லும் எண்ணிக்கையை பாதியாக குறைக்கலாம்.
மெடிகல் ஹிஸ்டரி:
நம் வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் சிறுவயது முதல் தற்போது வரை தனித்தனியாக அவர்களுக்கு இருக்கும் மருத்துவ பிரச்சினைகள், அதற்கு எடுத்த கொள்ளும் மருந்துகளின் பெயர்களை தெளிவாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வதன் மூலம் ஏதேனும் அவசர காலகட்டங்களில் மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அந்த நேரத்தில் பதட்டத்தோடு பழைய மருந்து சீட்டுகளை தேடாமல், பதட்டமின்றி அந்த நோட்டுப் புத்தகங்களில் குறிக்கப்பட்ட மருத்துவ குறிப்புகள் மூலம் தேவையற்ற அலைச்சலை குறைக்க லாம்.
கைகழுவ தேவைப்படும் சேனிடைசர் மற்றும் சோப்பு:
கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு அடிக்கடி நம் கைகளை முறையாக கழுவ வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால் சோப்பு மற்றும் Sanitizer அவற்றை வாங்குவதற்கு அடிக்கடி வெளியே செல்லாமல் ஆன்லைன் வர்த்தகம் மூலமாக மொத்தமாக ஒரு மாதத்திற்கு தேவைப்படும் அளவு வாங்கிக் கொள்ளலாம்.
சமையலுக்கு தேவையான எரிபொருள்:
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலங்களில் சமையலுக்கு தேவையான எரி பொருட்களை முன்னதாகவே ஆராய்ந்து எப்போது காலியாகும் என்று கணித்து முன்னதாகவே கேஸ் புக்கிங் செய்து கொள்ளலாம். இதன் மூலம் அவசர காலங்களில் கேஸ் காலியாவதால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கலாம்.
வீட்டில் இருந்து கொண்டு விளையாடலாம்:
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலகட்டங்களில் வீட்டில் உள்ள குழந்தைகள் வெளியே சென்று விளையாட இயலாது. ஆகவே வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நேரத்தைக் கழிக்க carrom board, chess board போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் மகிழ்ச்சியாக நாம் நேரத்தை வீட்டில் இருப்பவர்களுடன் செலவு செய்யலாம்.
இவ்வாறாக மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து குறிப்புகளையும் முறையாக பின்பற்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த 21 நாட்கள் வெளியே செல்லாமல் , வீட்டிலேயே இருந்து கொரோனா நோய் தொற்று பரவாமல் எளிதாக தடுக்கலாம்.