கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 7300-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 1,85,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இதுவரை 6,623 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலை பரவாமல் தடுப்பதற்காக நேற்று நண்பகல் மீது பிரான்ஸ் நாடு முடக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் மேக்ரான் அவர்கள் ஆணை வெளியிட்டுள்ளார்.
அவருடைய ஆணைப்படி, ” இன்று நண்பகல் 12 மணி முதல் நம் நாடு முற்றாக முடங்க போகிறது. இந்நிலையில், யாரும் தனியாகவோ அல்லது குழுவாகவோ வெளியே செல்ல அனுமதி இல்லை. நாம் அனைவரும் இந்த வைரஸ் தாக்குதல்களுக்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
அத்தியாவசியமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே இயங்கி வரும். மக்கள் யாராவது தனியாகவோ அல்லது குழுவாகவோ தேவையின்றி வெளியே சுற்றினால், அவர்களுக்கு அதிகபட்சமாக 135 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும்.
நாடு முழுவதும் முடங்க போவதால், வாடகை, மின்சாரம் மற்றும் எரிவாயு முதலிய கட்டணங்கள் ரத்து செய்யப்படும். அத்தியாவசியமாக வெளியே செல்பவர்களுக்கு ஒரு விண்ணப்பபடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை நிரப்பிவிட்டு, அதற்கான அத்தாட்சிகளையும் உடன் எடுத்து செல்ல வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தாக்குதலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோமாக” என்று நேற்று அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கையானது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.