செம்பருத்தி பூ சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி புட்டிகளில் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால் தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும். செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.
செம்பருத்தி முடி வளர்ச்சி, நரைமுடிப் பிரச்சனைகளைக் குணமாக்கும். பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய இடம் வகிக்கின்றது. செம்பருத்தி புதர்ச்செடி வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். செம்பருத்தி இலைகள் கூர்மையான நுனி, விளிம்புகள் பற்களுடன் கூடிய அடர்த்தியான பச்சை நிறமானவை.
செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.
பேன் தொல்லை அனைத்து வயதில் இருக்கும் நபர்கள், குறிப்பாக அடர்த்தியான தலைமுடியை கொண்ட நபர்களுக்கு பேன்கள் பிரச்சனை ஒரு தொல்லையாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலையில் இருக்கும் பேன்கள் தொல்லை நீங்கும்.
செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேநீர் பல்வேறு நாடுகளிலும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுநீரகத்தின் பிரச்னைகளின் போது, இயற்கையான முறையில் அதனை சரி செய்ய சர்க்கரை இல்லாமல் இந்த செம்பருத்தி தேநீரை பருக வேண்டும். மற்றும் மன அழுத்தத்துடன் இருக்கும் வேளைகளில் நம்மை சாந்தப்படுத்தவும் இந்த தேநீர் உதவுகிறது.
செம்பருத்தி இலைகள் மற்றும் பூவின் இதழ்களை அரைத்து செய்யப்பட்ட கலவை முடி உதிர்வதை தடுப்பதற்கான இயற்றையான பொருளாக உள்ளது. அது முடியின் நிறத்தை கருமையாக வைத்திருக்கவும், ஷாம்பு போட்ட பின்னர் தலைக்கு போடும் போது பொடுகுகளை நீக்கவும் உதவுகிறது.