தினமும் முடக்கத்தான் கீரையினை உட்கொண்டு வந்தால் உங்களை எப்பொழுதும் இளமையுடன் வாழ வழி வகுக்கும். இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் ஏற்படும் பிரீ ராடிகள் என்னும் செல் அழிவு ஏற்படாமல் காக்க உதவும்.
முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
தலைமுடி சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று பெரும்பாலானவர்களுக்கு தலையில் பொடுகு ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் முடக்கத்தான் இலைகளை கொண்டு செய்யப்பட்ட எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
முதலில் முடக்கத்தான் கீரையை தனியாக எடுத்து தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு சட்டியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் அறுத்து வைத்த வெங்கா யத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
ஒரு கரண்டி சோளமாவையும் சேர்த்து நன்கு கலக்கிய பின்னர் முடக்கத்தான் கீரையை போட்டு வதக்கி கொள்ளவும். கெட்டியான பக்குவத்திற்கு வந்தவுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். பத்து நிமிடம் கழித்து திறந்துப்பார்த்தால் சுவையான சூப் ரெடி! சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட சுவை அதிகமாக இருக்கும்.