Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மூடப்பட்டது மதுரை பெரியார் பேருந்து நிலையம்! எந்தெந்த பஸ் எங்கெங்க ஏறனும்?

 அதற்காக பெரியார் பஸ் நிலையம், காம்பளக்ஸ் பஸ் நிலையம் இணைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்காக பெரியார் பஸ் நிலையம் மூடப்பட்டது. எனவே மாற்று இடங்களில் பஸ்களை நிறுத்த போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. அதற்காக 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.* 

 

திருப்பரங்குன்றம், திருமங்கலம் வாயிலாக செல்லக்கூடிய பேருந்துகள் கே.பி.எஸ். ஓட்டல் டி.பி.கே. சாலையில் நிறுத்தப்படும்.

 

தெப்பக்குளம் திருப்புவனம் செல்லக்கூடிய பஸ்கள் டி.பி.கே. சாலை கிரைம் பிராஞ்ச் அருகில் நிறுத்தப்படும்.

Thirukkural

 

சிந்தாமணி, வேலம்மாள் ஆஸ்பத்திரி, நெடுங்குளம் வழியாக செல்லக்கூடிய பஸ்கள் டி.பி.கே. சாலையின் மத்தியில் நிறுத்தப்படும்.

 

அவனியாபுரம், காரியாபட்டி மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் ஹயாத்கான் தெரு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து புறப்படும்.

 

அழகர்கோவில், ஊமச்சிகுளம் வழியாக செல்லக்கூடிய பஸ்கள் கோட்டை மற்றும் திண்டுக்கல் ரோடு பகுதியில் இருந்து புறப்படும்.

 

ஒத்தக்கடை, திருவாதவூர், மேலூர் பகுதியில் செல்லக்கூடிய பஸ்கள் பாண்டி பஜார் சர்ச், ரெயில் நிலையம், மேலவெளிவீதி பகுதிகளில் இருந்து புறப்படும்.

 

பாத்திமா கல்லூரி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, விக்கிரமங்கலம் பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் மகபூப்பாளையம், மதுரை ரெயில் நிலையம் மேற்கு நுழைவாயிலில் இருந்து கிளம்பும்.

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், செக்கானூரணி, உசிலம்பட்டி மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகம் அருகில் இருந்து புறப்படும்.

 

மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையம், அண்ணா மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் மதுரை பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகில் இருந்தும், பைபாஸ் ரோடு பகுதிகளில் இருந்து புறப்படும்.

 

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மேலாண் இயக்குனர் சேனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே பெரியார் பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளதால், சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மேயர் முத்து பாலத்தில் இருந்து நேரிடையாக எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் ஏறுவதற்கு, பெரியார் பஸ் நிலையத்திற்குள் ஒதுக்கப்பட்ட இடம் வழியாக சென்று பாலத்தில் ஏற வேண்டும்.

 

  அதேபோல் மேலவெளி வீதிக்கு செல்வதற்கு பெரியார் பஸ் நிலையத்திற்குள் ஒதுக்கப்பட்ட பாதையில் சென்று, கட்டபொம்மன் சிலையை அடைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தையின் இதயம் – இதயத்தில் ஓட்டையுடன் குழந்தைகள் – தாய்ப்பால் சந்தேகங்கள்

tamiltips

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடமிளகாயயின் குணநலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

tamiltips

நாவல் மரத்தில் பழம், விதை, இலை, மரப்பட்டை என எல்லாமே ஆரோக்கியம் தரும்!

tamiltips

எப்போதும் உடல் சோர்வாகவும் தூக்க உணர்வுடனும் இருக்கிறதா? இது தான் அதற்கு காரணம்!

tamiltips

தீவிரமடையும் கொரோனா..! குவியும் ஆன்லைன் ஆர்டர்..! 1 லட்சம் பேரை வேலைக்கு எடுக்கும் அமேசான்..!

tamiltips

சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்ள ஆசையா? மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யுங்க!

tamiltips