ஒரு ஸ்பூன் கிராம்பில் 21 கலோரிகள் இருக்கின்றன. 1 கிராம் கார்போஹைட்ரேட்டும் ஒரு கிராம் நார்ச்சத்தும் உள்ளன. 30 சதவீதம் மாங்கனீஸ், 4 சதவீதம் வைட்டமின் கே, 3 சதவீதம் வைட்டமின் சி ஆகியவை உள்ளன.
காரமான உணவுகளை உட்கொள்வது, ஒழுங்கற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், குறைந்த உடல் அசைவு மற்றும் மது அருந்துவது போன்றவற்றால் அசிடிட்டி ஏற்படும். சாப்பிடும் உணவு, உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்கு செல்லும்போது அதனை சீரணிக்கத் தேவையான அமிலத்தை இரைப்பை சுரப்பிகள் உருவாக்குகின்றன. செரிமானத்துக்கு தேவையானதை விட அதிக அமிலம் உற்பத்தியாகும்போது வயிற்றில் எரிச்சல் உணர்வு ஏற்படுகிறது.
வயிற்றில் எரிச்சல், தொண்டை, இதயத்தில் எரிச்சல், கெட்ட சுவாசம், அஜீரணம், வாயில் நீடித்த புளிப்பு சுவை, குமட்டல், மலச்சிக்கல் உள்ளிட்டவை இருந்தால் அதற்குப் பெயர் அசிடிட்டி. எண்ணெய் மற்றும் கார உணவுகளை தொடர்ந்து உண்பதால் இந்திய மக்களுக்கு இந்தத் தொல்லை அதிகம். இயற்கை பொருட்களான கிராம்பு, துளசி இலைகள், இலவங்கப்பட்டை, மோர், ஆப்பிள் சிடர் வினிகர், சீரகம் உள்ளிட்டவை உடனடி நிவாரணம் அளிக்கின்றன.
மூன்று கிராம்புகளை மெல்வதால் வெளிவரும் ஜூஸ் அசிடிட்டியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். நொறுக்கிய கிராம்புகளை ஏலக்காயுடன் சேர்த்து சாப்பிட்டால் கெட்ட வாடையை போக்கும்.