அரிசி மாவு முகத்தில் அப்ளை செய்தால், உடனடி கலர் கிடைக்கும். சருமம் பளபளக்கும். அந்த அரிசி மாவை எந்தெந்த பொருள்களோடு கலந்து பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
அரிசியை கழுவிய நீர் அழுக்கு என்று மட்டும் கீழே கொட்டிவிடாதீர்கள். அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அந்த நீரைக் கொண்டு முகம் கழுவலாம். குளிக்கும் தண்ணீரோடு சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி குளிக்கவும் பயன்படுத்தலாம்.
அரிசி மாவை பால், உருளைக்கிழங்கு, தயிர், மஞ்சள், தேன், கற்றாழை, முட்டை ஆகியவற்றுாடு சேர்த்துப் பயன்படுத்தும்போது மிகச் சிறந்த பலனை, உடனை ரிசல்ட்டைப் பெற முடியும்.
அரிசிமாவும் பயத்த மாவும் அரிசி மாவையும் பயத்த மாவையும் சேர்த்து பயன்படுத்தும் போது உங்களுக்குப் பலன் இரட்டிப்பாகும். பயத்த மாவு சருமத்தை பட்டுப் போல் மென்மையாக்கும்.
அரிசி மாவும் பாலும் பால் மிகச்சிறந்த கிளன்சராக சருமத்தில் செயல்படுகிறது. அதோடு சருமத் துளைகளுக்குள் தங்கியிருக்கும் அழுக்குகளை நீக்கி, முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றைப் போக்குவதில் பால் மிக முக்கியப் பங்காற்றுகிறது.
அரிசி மாவு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்த கலவை முகத்தில் உள்ள தளர்ந்து போயிருக்கும் தசைகளையும் இருக்கமாகச் செய்யும். இதனால் சருமத்தை வயதான தோற்றத்தை தவிர்த்து இளமையாக வைத்திருக்க முடியும். அதிகப்படியான மெலனின் சுரப்பை தடுக்கிறது. மெலனின் அதிகமாக சுரப்பதால் தான் சருமம் கருமையடைகிறது.