அதனால், அந்தப் பெண்ணும் பெரும் அவஸ்தைப்படுவார்
என்பதை சொல்லவே வேண்டியதில்லை.
முக
அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த முகப்பருவால் ஏற்படும் தழும்புதான்.
இதையடுத்தே எண்ணெய் வழிதல், கருவளையம் போன்றவை இருக்கும்.
பலருக்கும்
பருவ காலத்தில் முகப்பரு ஏற்படுவது சகஜம்தான். பெரும்பாலானவர்களுக்கு
அது தானாகவே சரியாகிவிடும். கிள்ளிவிடுதல், தவறான மருந்து போடுதல் காரணமாக ஒருசிலருக்கு
பரு இருந்த இடத்தில் தழும்புகள் நின்றுவிடும்.
பொதுவாகவே
முகப்பருத்தழும்புகளை போக்குவது மிகவும் சிரமமான ஒன்று. முகப்பருத்தழும்புகளால் பலருக்குத்
தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. குறிப்பாக வேலைக்குப் போகும் இடத்தில், இது போன்ற முகப்பரு
தழும்புள்ளவர்கள் பலர் மனம் சங்கடப்படுவர்.
இப்போது
இதனை மருத்துவம் கையில் எடுத்துள்ளது. ஆம், பல்வேறு மருத்துவமனைகளில் முகப்பருத்தழும்புகள்
நீக்கும் சிகிச்சை நடந்து வருகிறது. குறிப்பாக
லேசர் மற்றும். மைக்ரோ டெர்பாபரேட்டர் சிகிச்சைகளின் மூலம் 80 முதல் 90 சதம் வரை தழும்புகள்,
முகச் சுருக்கங்கள் சரிசெய்துவிட முடிகிறது.
ஸ்கின்
ரெஜிவுனேஷன் (Skin Rejuvenation) எனப்படும் முகம்பொலிவு சிகிச்சையால் முகப்பருக்கள்
குறைக்கப்படுகிறது. பெரும்பாலான நடிகர், நடிகைகள்
இப்படித்தான் தங்கள் அழகை காப்பாற்றுகிறார்கள். அதனால் பருவினால் ஏற்படும் தழும்புகளைக்
குறைக்க கண்ட கண்ட மருந்துகளை நம்பிக்கொண்டிருக்காமல், மருத்துவரை நாடுங்கள், அழகை
பெறுங்கள்.