Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தொப்பையை குறைக்கவே முடியவில்லையா?கொள்ளு சாப்பிட்டால் கண்டிப்பா முடியும் !!

கொள்ளுப் பருப்பை ஊறவைத்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுக்கு உண்டு. கொள்ளுவை நீரில் போட்டு கொதிக்கவைத்த நீரை அருந்தினால் சளி, ஜலதோஷம் குணமாகும்.

வயிற்றுப் போக்கு,வயிற்றுப் பொருமல் போன்றவற்றைக் குணப்படுத்தும் கொள்ளு நீர்  பெண்களின் வெள்ளைப் போக்கையும் மாதவிலக்கு குறைபாட்டையும் கட்டுப்படுத்துகிறது.

எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது. குளிர் காலத்தில் அனைவருக்கும் அடிக்கடி சளிப்பிடிக்கும். இந்தக் காலங்களில் கொள்ளு சூப் குடித்துவந்தால் எளிதில் சளி பிடிக்காது.  இரவு ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு நிச்சயம் எடையும் தொப்பையும் குறைந்துபோகும். கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு, கொள்ளு சூப் போன்றவகைகளில் எள்ளைப் பயன்படுத்தலாம்.

சிலருக்கு எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். சிறிது சாப்பிட்டால்கூட நாள் முழுவதும் பசி தோன்றாது.  இவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ சாப்பிட்டு வந்தால் நல்ல  பசி உண்டாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கொரானா என்னை எப்படி தாக்கியது! இளம்பெண் பகிர்ந்த பகீர் அனுபவம்!

tamiltips

உங்கள் சரும அழகை மேம்படுத்த ஆசையா… இதோ அழகுக் குறிப்புகள்

tamiltips

தண்ணீர் தொட்டியில் பிரசவம் ஏன் நம் நாட்டில் நடப்பதில்லை?

tamiltips

தள்ளுவண்டி கடைக்காரர் ஆன இளம் என்ஜீனியர்! கரூர் பரிதாபம்!

tamiltips

எந்த அரிசியிலும் இல்லாத அதிக சத்துக்களை கொண்டது இந்த அரிசி!!

tamiltips

குழந்தை தரும் செவ்வாழை… எப்படி எப்படி?

tamiltips