திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு
உட்பட்ட கவுசல்யா திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த தாழ்த்தப்பட்ட
சமுதாயத்திற்கு உட்பட்ட சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம்
முடிந்த சில மாதங்களிலேயே கவுசல்யாவின் பெற்றோர், சங்கரை வெட்டிக் கொலை செய்தனர்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தங்கள் மகளை திருமணம் செய்ததால்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சங்கரை அவர்கள் கொலை செய்துள்ளனர்.
முதல் கணவர் சங்கருடன் கவுசல்யா
இந்த வழக்கில்
கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட ஆறு பேருக்கு தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்டோர் விடுதலை
செய்யப்பட்டனர். சங்கர் கொலை செய்யப்பட்ட பிறகு இனி தனக்கு எல்லாமே சங்கரின்
பெற்றோர் தான் என்று கூறி அவர்களுடன் கவுசல்யா வசித்து வந்தார். அதன் பிறகு
எவிடன்ஸ் அமைப்பின் மூலமாக பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் கவுசல்யா பங்கேற்க
ஆரம்பித்தார்.
கோவையில் திருமணம்
ஆணவக் கொலைகளுக்கு
எதிரான செயல்பாடுகளில் கவுசல்யாக தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். மேலும் பெரியார்
விடுதலை கழகம் உள்ளிட்ட பகுத்தறிவு இயக்கங்களிலும் கவுசல்யாவுக்கு ஈடுபாடு
ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் திடீரென கோவையில் சக்தி என்பவர் கவுசல்யா
சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். சக்தி பறை இசைக் குழு ஒன்றை நடத்தி
வருகிறார்.
அந்த பறை
இசைக்குழுவுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது சக்திக்கும் –
கவுசல்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக
உருவெடுத்தது. இதனிடையே கவுசல்யா சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு
இடங்களுக்கு ஆண் நண்பர்களுடன் செல்வது விமர்சனத்திற்கு ஆளானது. அவரது செயல்கள்
ஒழுக்க கேடானது என்று கூட சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
மறு திருமணத்திற்கு பிறகு பறையாட்டம்
இந்த
விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் 2வதாக காதலித்த
சக்தியை கவுசல்யா திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் பொதுவெளியில் சமூகம்
சார்ந்த செயல்பாடுகளை தொந்தரவு இன்றி செயல்பட முடியும் என்று நம்புவதாக கவுசல்யா
கூறியுள்ளார்.