Tamil Tips
குழந்தை பெண்கள் நலன் பெற்றோர்

குழந்தைகளுக்கான தயாரிப்புகளில் உள்ள 7 ஆபத்தான கெமிக்கல்கள்… கண்டறிவது எப்படி?

குழந்தைகளை எவ்வளவு ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்கிறோமோ அதே விழிப்புணர்வு குழந்தைகளின் பொருட்களை வாங்குவதிலும் இருக்க வேண்டும். நமக்கு புரியாத, தெரியாத கெமிக்கல் வார்த்தைகள் லேபிளில் இருப்பதால், அதன் விளைவுகள் தெரியாமல் பொருட்களை வாங்கி குவிக்கிறோம். இனி, குழந்தைக்கு தேவையான பேபி தயாரிப்புகளை வாங்கும் முன் இந்தப் பதிவை நினைவில் வைத்துக்கொண்டு வாங்குங்கள்.

பேபி தயாரிப்புகளில் உள்ள 7 கெமிக்கல்கள்…

அதிக வாசனை (Fragrance)

வாசனை சேர்க்கப்படாத பொருட்கள் இருக்கிறதா எனக் கேட்டால் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அனைத்திலும் வாசனை மிகுதியாக உள்ளது.

சில நிறுவனங்கள் தாங்கள் சேர்க்கும் கெமிக்கல்களின் வாசனை நீங்குவதற்காகவே அதிகபடியான வாசனையை சேர்க்கிறார்கள்.

இந்த வாசனை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றால் கோல், பெட்ரோலியம், சில சின்தட்டிக் கெமிக்கல்ஸ் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

இந்த வாசனை மிகுந்த பொருட்கள் சருமத்தில் நீண்ட நேரம் இருக்க கூடியதால், சுவாச பாதை, நரம்பு மண்டலம், சருமம், கண்கள் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படலாம்.

Thirukkural

அதிக வாசனை கலந்த பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் குழந்தைக்கு ஆஸ்துமா பாதிப்புகள் வரலாம்.

பேபி பவுடர், பேபி வாஷ், பேபி ஷாம்பு, லோஷன் போன்ற எந்த பேபி பொருட்களை வாங்கும் முன்னும் அதன் லேபிளை கட்டாயம் சரி பார்த்து, அதிக வாசனை இல்லாத பொருட்களாக வாங்குங்கள்.

டாக் (talc)

பேபி பவுடரில் சேர்க்கக்கூடிய பவுடர் மினரல் (talc) இது. மற்ற காஸ்மெட்டிக் பவுடர்களிலும் சேர்க்கப்படுகிறது.

சருமத்தை உலர செய்யும் தன்மை கொண்டது. ஆதலால், இது பவுடர்களில் சேர்க்கப்படுகிறது.

இந்த கெமிக்கல், நுரையீரலில் எரிச்சல் வரவைக்க கூடியது.

கார்சினோஜெனிக், அதாவது புற்றுநோய் காரணியாக செயல்படும்.

விளைவுகளை ஏற்படுத்த கூடிய கெமிக்கல் என்பதால், இந்த கெமிக்கலை தவிர்த்துவிட்டு பல நிறுவனங்களும் டாக்-ஃப்ரீ பவுடரையே தயாரித்து விற்கின்றனர்.

எனவே, குழந்தைகளுக்கு வாங்கும் பவுடர்களில், ‘டாக்’ இல்லாமல் இருப்பதைப் பார்த்து வாங்குங்கள்.

chemicals in baby products

டயாக்ஸேன் (1,4-dioxane)

57% சதவிகித பேபி சோப்களில் 1,4-dioxane எனும் கெமிக்கல் இருப்பதாக ‘என்விரான்மென்டல் வொர்க்கிங் குரூப்’ சொல்கிறது.

Ethylene oxide, இதுவும் ஒரு கெமிக்கல்தான். புற்றுநோய் காரணியாக செயல்படும்.

குழந்தையின் பொருட்களை வாங்கும் முன், லேபிளில் ‘eth’ எனும் எழுத்துகள் இருந்தால், அதில் இந்த 1,4-dioxane எனும் கெமிக்கல் கலக்கப்பட்டிருக்கிறது என அர்த்தம்.

எனவே, இந்த கெமிக்கல்கள் கொண்ட பேபி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

polyethylene, polyethylene glycol, sodium laureth sulfate, ceteareth, oleth, oxynol, -xynol, PEG போன்ற கெமிக்கல்கள் லேபிளில் இருந்தால், அந்தப் பொருட்களை வாங்க வேண்டாம்.

ப்ரொப்லீன் கிளைகால் (Propylene glycol)

சருமத்தில் ஊடுருவி செல்லக்கூடிய கெமிக்கல் இது.

சருமம், இந்த கெமிக்கலை உறிஞ்சிக்கொள்ளும்.

இது புற்றுநோய் காரணியாக செயல்படும்.

சில பேபி தயாரிப்புகளில் இந்த கெமிக்கல் சேர்க்கப்படுகிறது.

முக்கியமாக, பேபி வைப்ஸ் தயாரிப்பதில் இந்த கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இது பாதுகாப்பானது அல்ல.

குழந்தையின் பொருட்களை வாங்கும் முன், லேபிளில் polyethylene glycol (PEG) and polypropylene glycol (PPG) இல்லாமல் இருப்பதாகப் பார்த்து வாங்குங்கள்.

மினரல் எண்ணெய் (mineral oil)

மினரல் எண்ணெயும் அதிக வாசனையும் கலந்தே, பேபி எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

பெட்ரோலியம் தயாரிப்புகளில் கிடைக்க கூடிய ஒரு பொருள்தான் ‘மினரல் எண்ணெய்’.

தோலுக்கு கவர் போல செயல்படும்.

சருமத்தின் நச்சுக்களை வெளியேறவிடாமல் தடுக்கும்.

எனவே மினரல் எண்ணெய் உள்ள பேபி எண்ணெயைத் தவிர்க்கவும்.

இயற்கையான பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி உங்கள் குழந்தைக்கு நீங்கள் மசாஜ் செய்துவிடலாம்.

நம்பகத்தன்மையான, தரமான பிராண்ட்களில் உள்ள பேபி எண்ணெய் பயன்படுத்தலாம்.

how to find chemicals in baby products

ட்ரைக்ளோசன் (triclosan)

‘ஆன்டிபாக்டீரியல்’ எனக் குறிப்பிட்டிருக்கும் பொருட்களில் இந்த ட்ரைக்ளோசன் கெமிக்கல் கலந்து இருக்கும்.

இதுவும் புற்றுநோய் காரணியாக செயல்படும். ஹார்மோன்களில் இயக்கத்தை மாற்றும் விளைவை ஏற்படுத்தும்.

குழந்தைகளைப் பாதுகாக்க, பாக்டீரியாவிலிருந்து தப்பிக்க என இதை சொல்வார்கள். ஆனால், இது தவறானது.

இந்த கெமிக்கல் உள்ள பொருளை பயன்படுத்தினால், குழந்தைக்கு இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு தன்மையை சீர்குலைக்கும்.

குழந்தைகளுக்கு இருக்கின்ற அலர்ஜி தன்மையை அதிகரிக்கும்.

ஆன்டிபாக்டீரியல் எனும் சொல்லக்கூடிய பொருட்கள், அதன் வேலைகளை சிறப்பாக செய்யாது.

ஆன்டிபாக்டீரியல் சோப், பாடி வாஷ், ஹான்ட் வாஷ் போன்றவற்றிலிருந்து தள்ளி இருப்பதே பாதுகாப்பானது.

பாராபென் (Paraben)

பாராபென் எனும் கெமிக்கல் அனைத்திலும் இருக்கிறது.

சோப், பாடி வாஷ், ஷாம்பு, மாய்ஸ்சரைசர், பேபி தயாரிப்புகள் போன்ற பலவற்றிலும் காணப்படுகிறது.

நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கெமிக்கல் இது.

இனப்பெருக்கத் திறனை குறைக்கும்.

ஹார்மோன் சுரப்புகளை மாற்றும்.

சருமத்துக்கு எரிச்சலை உண்டாக்கும் தன்மை கொண்டது.

Paraben, benzoic acid, propyl ester போன்ற கெமிக்கல்கள் உள்ள பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளுக்கான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் முன் லேபிளை சரிபார்த்து வாங்குவது நல்லது. நல்ல தரமான பிராண்ட்களை வாங்கலாம். குழந்தைகளின் சருமத்துக்கு ஏற்ற வகையில் உள்ள தரமான பிராண்ட்களில் ஒன்று, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் தயாரிப்புகள். பேபி தயாரிப்புகளில், இது சிறந்த பிராண்ட் என்றும் சொல்லலாம். இந்த பிராண்டில் உள்ள பொருட்கள் குழந்தைகளுக்கு ஏற்றது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் எடை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

tamiltips

கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி குறைய வழி இல்லையா? இதோ 16 சிறந்த வழிகள்…

tamiltips

பிரசவத்துக்குப் பிறகு எப்போது முதல் மாதவிலக்கு வரும்? மாதவிலக்கு வருவது இயல்பானதா?

tamiltips

0 – 3+ குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை நீக்கும் வீட்டு வைத்தியம்…

tamiltips

கர்ப்ப காலத்தில் எப்படி ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது?

tamiltips

குழந்தைக்கு காத்திருப்பவர்கள் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் முறைகள்

tamiltips