Tamil Tips
குழந்தை பெண்கள் நலன் பெற்றோர்

தூளி, மெத்தை, தொட்டில்… குழந்தையை எதில் படுக்க வைக்க வேண்டும்?

தன் தாயின் வயிற்றில் 9 மாதத்துக்கும் மேல் இருந்த குழந்தை, பிறந்த பின் படுக்கையிலோ தாயின் மடியிலோ தூளியிலோ சரியாக தூங்குமா? தன் படுக்கை நிலையைக் குழந்தை எப்படி பழகி கொள்ளும்? குழந்தைக்கு தூளி, மெத்தை, பாய், நவீன தொட்டில் ஆகியவற்றில் எது சிறந்தது. எது குழந்தைக்கு ஆரோக்கியத்தைத் தரும். இங்கு இவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

எந்த தொட்டில் குழந்தைக்கு நல்லது?

பொதுவாக, குழந்தை தன் தாயின் வயிற்றை விட்டு வெளியே வந்ததும், தன் படுக்கை நிலையை மாற்றிக் கொள்ளவும் பழகிக்கொள்ளவும் சிரமப்படும்.

நம் முதுகு எலும்புகள் லேசான வளைவுத்தன்மையுடன் இருக்கும். தாயின் வயிற்றில் பனிக்குட நீரில் இருந்த குழந்தை, பந்து போல சுருண்டிக்கொண்டு 9 மாதங்கள் இருந்து பழகி இருக்கும்.

திடீரென்று தன் படுக்கை நிலை மாறவே குழந்தைக்கு புதிதாகவும் இயல்பற்றதாகவும் இருக்கும்.

பிறந்த குழந்தைகளை சமதளமான தொட்டிலில் படுக்க வைக்கும் போது, குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Thirukkural

thooli is safe for newborn

Image Source : untumble

இதையும் படிக்க: குழந்தைகளின் கண்களில் மை வைக்கும் முறை சரியா? தீர்வு என்ன?

நமது பாரம்பர்ய தொட்டில் (தூளி) தான் குழந்தைக்கு ஏற்றது. ஏன் என்றால் குழந்தை வயிற்றில் இருக்கும் போது இருக்கும் நிலையில் நம் பாரம்பர்ய தொட்டிலான தூளியே அதைக் கொடுக்கும்.

கட்டில் போன்ற சமதளமான தொட்டில் குழந்தைக்கு அவ்வளவாகப் பொருந்தாது.

நம் பாரம்பர்ய தொட்டில் முறையான தூளியில் குழந்தையை போட்டால், குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.

தூளியில் போட்டு வளர வைக்க கூடிய குழந்தைகளுக்கு முதுகில் வலி குறைவாக காணப்படும்.

எப்படி தூளியை கட்டுவது?

நீளமான பருத்திப் புடவையோ பருத்தி வேட்டியோ எடுத்து, அதை அப்படியே அல்லது கயிற்றில் முடிந்தோ விட்டம், கொக்கிகளில் தொங்கவிட்டு தொட்டிலாக்கி குழந்தையை படுக்க வைப்பது நல்லது.

புடவை அல்லது வேட்டியால் தயாரித்த தொட்டிலை குழந்தைக்கு பயன்படுத்துவதே தூளி எனப்படும்.

இதையும் படிக்க: 2-வது மாத குழந்தையை எப்படி பாதுகாப்பது? தாய்க்கு வரும் பிரச்னைகளை தவிர்ப்பது எப்படி?

which bed is safe for baby

Image Source : Human Heed

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

தூளியால் குழந்தைக்கு என்னென்ன நன்மைகள்?

தூளி, படுக்கும் குழந்தைகளுக்கு தாயின் மார்ப்போடு ஒட்டி இருப்பது போன்ற உணர்வு இருக்கும்.

ஒருவித கதகதப்பான உணர்வு அவர்களுக்கு கிடைக்கும்.

குழந்தையின் முதுகு எலும்பு வளைவுகள், சரியாகத் தூளியில் பதிவதால் குழந்தைக்கு சௌகரியமாக இருக்கும்.

தூளியில் படுத்திருந்தால் நெருக்கமான ஒரு உணர்வு குழந்தைக்கு கிடைக்க, குழந்தை நன்கு தூங்கும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதால் உடலில் என்ன நடக்கும்? எப்போது மொட்டை அடிக்கலாம்?

தூளி முன்னும் பின்னும் ஆடுவதால் குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

குழந்தை தூளியில் சிறுநீர் கழித்துவிட்டால், தூளியிலிருந்து சிறுநீர் வடிந்து, தரைக்கு வந்துவிடுவதால் குழந்தையின் உடலில் ஈரம் தங்காமல் தடுக்கப்படுகிறது.

புரண்டாலும் குழந்தை கீழே விழ வாய்ப்பில்லை. குழந்தைக்கு தூளி பெஸ்ட்.

குழந்தையை தூளியில் படுப்பதால் காலும் தலையும் சற்று உயர்ந்தும் வயிறும் முதுகும் பள்ளமான இடத்தில் இருப்பதால் குழந்தை உண்ட உணவை வாந்தி எடுக்காமல், குழந்தையால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

தாயோ, தூளியை ஆட்டுபவரோ தூளியை ஆட்ட குழந்தையால் தன் நேர் கண்ணால் பார்க்க முடியும். இதனால் மாறு கண் பிரச்னை வராமல் தடுக்கப்படுகிறது.

இதையும் படிக்க: குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகள் என்னென்ன?

is thooli is safe

Image Source : YK Antiques

இதையும் படிக்க: கிருமிகள் தாக்காமல் குழந்தைகளின் துணியை எப்படி பராமரிப்பது?

தூளியின் அசைவானது பெண்டுலம் போல முன், பின்னாக ஆடும் படியாக இருப்பதால், குழந்தையின் ஈக்குலிபிரியம் என்று சொல்லக்கூடிய சிறுமூளையின் சமநிலை பாதுகாக்கப்படுகிறது.

தூளியின் நிழல் குழந்தையின் மேலே விழுவதால், குழந்தை நன்கு தூங்கும். நீண்ட நேரம் தூங்கும்.

குழந்தைகள் கால்களை பின்புறமாக மடக்காமல், நிமிர்ந்து, தொட்டிலில் படுப்பதால், மூட்டு எலும்புகள் ஆரோக்கியமாகின்றன. எதிர்காலத்தில் மூட்டு வலி வருவதும் குறையும்.

தூளியில் இருக்கும் குழந்தையை எறும்போ மற்ற பூச்சிகளோ கடிக்கும் வாய்ப்பு குறைவு.

தூளியை 45 டிகிரி வரை பாதுகாப்பாக ஆட்ட முடியும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்றபடி வேகத்தை கூட்டி கொள்ளலாம். மிதமான வேகமே நல்லது.

தூளியில் தூங்கும் குழந்தைக்கு மன அமைதி கிடைக்கும்.

நவீன தொட்டில் முறை, மெத்தையைவிட தூளியே குழந்தைக்கு ஆரோக்கியத்தைத் தரும். இதனுடன் பாதுகாப்பானதும்கூட. இடவசதி, நாகரீகம் கருதி தூளி பழக்கத்தை விட்டுவிடாதீர்கள்.

தூளியால் கிடைக்கும் நன்மைகளைக் குழந்தைகள் அனுபவிக்கட்டும். ஆகவே, நம் பாரம்பர்ய முறை தூளி முறைக்கே குழந்தைகளை பழக்குங்கள். இதுவே குழந்தைகளுக்கு ஆரோக்கியம்.

Source: ஆயுஷ் குழந்தைகள்

இதையும் படிக்க: 0-5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

5 பொருட்கள் மூலம் சிம்பிள் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் ரெசிபி…

tamiltips

பெண்களுக்கு நடக்கும் பல வகை பிரசவங்கள்- எத்தனை பிரசவ முறைகள் இருக்கின்றன?

tamiltips

கோபம் வந்தால் இதையெல்லாம் செய்யுங்க… தாய்மார்களுக்கான டிப்ஸ்…

tamiltips

தடுப்பூசி பற்றி பெற்றோர் கேட்கும் கேள்விகள் & பதில்கள்!

tamiltips

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படாமல் தடுக்க, என்ன கற்றுத்தர வேண்டும்?

tamiltips

அறிவான குழந்தை பிறக்க தாய் என்னென்ன செய்ய வேண்டும்?

tamiltips