குழாயைத் திறந்து மூடினால், எப்படி தண்ணீர் நிற்குமோ அதுபோல உடனடியாக தாய்ப்பால் குடிப்பதைக் குழந்தை நிறுத்தியவுடன் தாய்ப்பால் சுரப்பு நிற்காது. குறைந்தது 6-8 மாதங்கள் ஆகும். இது இயல்பானதுதான். அதைப் புரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைக்கு 1 ½ – 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். பின்னர், பெரியவர்கள் உண்ணும் உணவை குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்துங்கள்.
குழந்தைக்கு பிடித்தமான திட உணவுகளை செய்து கொடுத்துப் பழக்கினால், தாய்ப்பாலை அவர்கள் அதிக விரும்ப மாட்டார்கள்.
தாய்ப்பால் குடிக்காமல் இருந்து, மெல்ல மெல்ல உங்களுக்கும் தாய்ப்பால் சுரப்பு குறைந்து கொண்டே வரும். பின்னர் நின்றுவிடும்.
எப்படிப் பாதுகாப்பான முறையில் தாய்ப்பாலை நிறுத்த வழிகள் இருக்கிறது என இந்த லின்கில் பாருங்கள்.
இதையும் படிக்க: குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?
குழந்தை பெரியவர்களான பிறகு தாய்ப்பால் சுரக்குமா?
அரிதாக சில பெண்களுக்கு இப்படி நடக்கலாம். ஒரு சிலருக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பால் சுரப்பு இருக்கும். இதனை Galactorrhoea என்பார்கள்.
அதிக ஸ்ட்ரெஸ், ஹார்மோன் பிரச்னைகளால் இப்படி நடக்கலாம்.
புரோலாக்டின் ஹார்மோன் மற்றும் தைராய்டு ஹார்மோன் பிரச்னை குறைபாடுகளுக்கு மாத்திரை சாப்பிட்டால் இந்தப் பிரச்னை குணமாகும்.
மல்லி பூ வைத்தியம் பலன் தருமா?
பால் சுரப்பதை நிறுத்துவதற்காக மல்லிகைப் பூக்களை மார்பகத்தின் மீது சுற்றிக் கட்டிக்கொள்வார்கள்.
மல்லிகைப் பூவில் இருக்கும் ஒரு ரசாயனத்துக்கு ஓரளவு பால் சுரப்பைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.
அதிகமாக தாய்ப்பால் சுரக்கும்போது, மல்லிகைப்பூ வைத்தியம் பலன் தருவது கொஞ்சம் கஷ்டம்.
உடனடியாக பலன் கிடைக்காது. கொஞ்சமாகதான் பலன் கிடைக்கும்.
இதனால் பாதிப்போ, பக்க விளைவுகளோ இல்லை.
தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்போது மல்லிகைப்பூ வைத்தியம் செய்யலாம். பலன் அளிக்கும்.
தாய்ப்பாலை நிறுத்த வழிகள்… வீட்டு வைத்திய முறைகள்…
தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், தாய்ப்பாலின் உற்பத்தியைத் தடுக்கலாம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
புதினா டீ, புதினா துவையல், புதினா சாதம், புதினா சட்னி, புதினா ஜூஸ் எனத் தினமும் புதினாவை ஏதாவது ஒரு உணவு வகையில் சேர்த்துக் கொள்ளுங்கள். தாய்ப்பால் சுரப்பது குறையும்.
துவரம் பருப்பை ஊறவைத்து, அரைத்து மார்பகத்தில் பற்று போடலாம். தாய்ப்பால் சுரப்பு குறையும்.
தேங்காய்ப்பூவை வதக்கி மார்பகத்தில் கட்டினால் தாய்ப்பால் சுரப்பு நிற்கும்.
சுத்தம் செய்த மல்லிகைப்பூ வைத்து மார்பகத்தில் கட்டலாம்.
சுத்தம் செய்த கொழுந்து வேப்பிலைகளை மார்பகத்தில் கட்டலாம்.
முட்டைக்கோஸ் இலைகளை நன்கு கழுவி மார்பகத்தில் வைத்துக் கட்டலாம். ப்ராவில் சொருகி வைக்கலாம். ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து குளிர்ச்சியாக வைக்கலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை இலைகளை மாற்றுங்கள்.
பிஞ்சான வாழையை அரைத்து மார்பகத்தில் பத்து போடலாம்.
தாய்ப்பால் மறக்க செய்ய கீர், பாயாசம், தேங்காய் பால் உணவுகளைக் குழந்தைகளுக்கு தரலாம்.
புரோட்டீன் சத்துள்ள உணவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் தாய்ப்பால் சுரப்பு குறையும்.
அடிக்கடி பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, திட உணவை அதிகரித்து மெல்ல தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தலாம்.
இதையும் படிக்க: குழந்தைக்கு எந்த மாதத்திலிருந்து சிறுதானியங்களைத் தரலாம்?
ஸ்ட்ரா போட்ட டம்ளரில் பால், ஜூஸ் போன்றவை குடிக்க குழந்தைகளைப் பழக்கப்படுத்தலாம். தாய்ப்பால் குடிக்கும் எண்ணம் குறையும்.
குழந்தையை தாயின் மார்பகங்களைப் பார்க்கும்படி செய்ய வேண்டாம். தாய்ப்பால் குடிப்பது நினைவுக்கு வரும்.
குழந்தை முன் உடைகளை மாற்ற வேண்டாம். குழந்தையின் கை மார்பகத்தில் படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிக்க: குழந்தையின் நகம் கடிக்கும் பழக்கம்… தீர்வுகள் என்னென்ன?
நீ வளர்ந்துவிட்டாய் இனி தாய்ப்பால் தேவையில்லை எனக் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கலாம்.
டைட்-ஃபிட்டங் ப்ரா அணியலாம். ஸ்ப்ரோட்ஸ் ப்ரா அணியலாம். தாய்ப்பால் சுரப்பதைக் குறைக்கும்.
தாய்ப்பால் சுரப்பு குறைந்துவிட்டது என உங்கள் மனதிலும் மூளையிலும் பதிய வையுங்கள்.
தாய்ப்பால் நிறுத்த வீட்டு வைத்தியங்கள் செய்தால், பால் கட்டி மார்பகம் வலிக்கலாம். ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுங்கள்.
பால் கட்டி இருந்தால் மிதமாக மசாஜ் செய்யுங்கள்.
தாய்ப்பால் நிறுத்திய முதல் நாள். மார்பகம் பாரமாக இருக்கலாம். படுக்கும்போது தலையணையை சப்போர்ட்டாக வைத்துக்கொள்ளுங்கள்.
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு, தாய்ப்பால் வறண்டு போக 8-10 நாட்கள் ஆகும். பிறகு சொட்டு சொட்டாக தாய்ப்பால் வரலாம். இது நார்மல்தான்.
இரவில் நீண்ட நேரம் தூங்குங்கள். உங்களுக்கு ரெஸ்ட் அவசியம்.
தாய்ப்பால் நிறுத்த, மகப்பேறு மருத்துவர் வழங்கும் மருந்துகளைச் சாப்பிடலாம்.
தாய்ப்பால் நிறுத்தி 3 – 5 வயது ஆகியும் தாய்ப்பால் சுரந்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது.
இதையும் படிக்க: தினமும் குழந்தைகளுக்கு தர வேண்டிய 12 உணவுகள்…
முக்கியமாக செய்ய வேண்டியவை
அடிக்கடி மார்பகங்களைத் தொட வேண்டாம். தூண்டவும் வேண்டாம்.
குழந்தை அழுது, அடம் பிடிக்கிறது எனத் தாய்ப்பால் தர வேண்டாம். விளையாட்டில் கவனம் திருப்பலாம். திட உணவுகளைக் குழந்தைக்கு கொடுக்கலாம்.
ப்ரெஸ்ட் பம்ப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள்.
சூடான தண்ணீர், இளஞ்சூடான தண்ணீர் மார்பகத்தில் படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்க: குழந்தைகளின் மூளைக்கு சக்தி தரும் 10 சிறந்த உணவுகள்…