ஒக்லாஹோமா பகுதியை சேர்ந்தவர் கேத்தரீன் ஷாங்கிளின். இவர், உடற்பருமன் மற்றும் வாயுத் தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வந்தார். இதுதவிர, கருப்பை கோளாறு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு,
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்டவைகளும் அவருக்கு இருந்தன. இப்படி பல்வேறு நோய்களால்
பாதிக்கப்பட்டாலும், தனது உடற்பருமனை குறைத்து, சிக்கென்ற தோற்றம் பெற கேத்தரீன் சபதம் மேற்கொண்டார்.
இதற்காக, மருத்துவர்களின் உதவியுடன் உடலில் உள்ள தேவையற்ற சதையை அகற்றிக் கொண்டார். ஆனால், அங்குதான்
ஒரு பிரச்னை. ஆம், கேத்தரீன் உடல் எடை குறைந்து, சிக்கென்ற தோற்றம் பெற்றுவிட்டாலும், அறுவை சிகிச்சையின் விளைவாக
சதை அகற்றப்பட்ட பிறகும், உடல் முழுக்க ஆங்காங்கே தோல் மட்டும் தொள தொளவென தொங்குகிறது. இதனால்,
உடலின் தோற்றம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, கேத்தரீன் வேதனை தெரிவிக்கிறார்.
இதன்பேரில், மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, தொள தொளவென தொங்கும் தோல் பகுதிகளை அகற்ற
உள்ளதாக, கேத்தரீன் கூறியுள்ளார். ஒரு சிலருக்கு, உடலில் உள்ள கொழுப்பு அல்லது சதைகளை அகற்றினாலும், அவற்றை போர்த்தியுள்ள
தோல் பகுதி அதே அளவில் காற்று பிடுங்கப்பட்ட பலுன் போல அப்படியேதான் இருக்கும். அதனையும் அறுவை சிகிச்சை மூலம்
சரிசெய்ய வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.