மாதவிடாய் என்பது வயது வந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் வருவது. இந்த நாட்களில் பெண்களின் உடலுக்குள் இருக்கும் செல்கள் சத்தம் அவர்களின் பிறப்பு உறுப்பு வழியாக வெளியேறும். இதனால் அந்த நாட்களில் பெண்களை தள்ளி வைக்கும் பழக்கம் தற்போது வரை நீடிக்கிறது.
இதற்கு காரணம் பெண்களின் உடலில் இருந்து வெளியேறும் அந்த ரத்தத்தில் இருக்கும் செல்கள் உயிரிழந்து இருப்பதால் அதன் மூலமாக நோய் தொற்று ஏற்படும் என்கிற அச்சம்தான். ஆனால் தற்போதைய சூழலில் பெண்கள் பாதுகாப்பான நாப்கின்கள் மூலமாக அந்த ரத்தத்தை அப்புறப்படுத்தி விடுவதால் நோய் தொற்று என்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. இருந்தாலும் கூட இந்த நாட்களில் உடலுறவு கொள்வதில் ஆண்களும் பெண்களும் தயக்கம் காட்டுகின்றனர்.
ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் உடல் உறவில் அதிக ஈடுபாடு ஏற்படும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு சில பெண்கள் அந்த நாட்களில் வலியை உணர்வார்கள் என்பதால் அவர்களுக்கு உறவில் ஈடுபாடு இருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் பெரும்பாலான பெண்கள் இந்த நாட்களில் உச்ச நிலையை அடைய வேண்டும் என்று விரும்புவதாகவும் இதனை வெளியே கூற தயங்குவதாகவும் மனோதத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.
தங்களிடம் வரும் பெரும்பாலான பெண்கள் உறவு குறித்து பேசும் போது கூச்சம் அடைவதாகவும் பிறகு விவரத்தைக் கூறி அவர்கள் பிரச்சினையை கேட்கும்போது பெரும்பாலானவர்கள் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்வதாகவும் மருத்துவர்கள் சொல்கின்றனர்.
அந்த நாட்களில் உரிய பாதுகாப்புடன் உறவு கொள்வதால் எந்த பிரச்சனையும் யாருக்கும் ஏற்படப் போவதில்லை என்பதை கூறி புரிய வைப்பதாகவும் மருத்துவர்கள் சொல்கின்றனர்.
ரத்தப்போக்கு இல்லாத சமயத்தில் பெண்கள் தாராளமாக தங்கள் துணையுடன் சேரலாம் என்றும் அதற்கு மனதளவில் இருவரும் தயாராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே முன்னெச்சரிக்கை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மாதவிடாய் சமயத்தில் பெண்கள் கருத்தரிக்க வாய்ப்பு குறைவுதான் என்றாலும் அதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூறிவிட முடியாது. எனவே உரிய பாதுகாப்பு முறையை பயன்படுத்தி பெண்கள் மாதவிடாய் சமயத்தில் உறவு கொள்வதில் பிரச்சினையில்லை என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.