எப்போதாவது உறக்க நேரம் குறைந்தபோது கொட்டாவி வருவது சரி. ஆனால் எந்நேரமும் கொட்டாவி என்று இருந்தால் அது உடல் சோர்வு, மந்தம், உறக்கம் மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதற்கான அறிகுறி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மூளைதான் உடல் அசைவுகள் பெரும்பாலானவற்றுக்கு கட்டளை பிறப்பிக்கிறது ஆனால் அவற்றின் ஆரோக்கியம் குறைந்தாலும் கொட்டாவி வரும். பக்கவாதம், அலர்ஜி போன்றவை ஏற்படும் போதும், கல்லீரலில் பாதிப்புகள் இருந்தாலும், மூளையின் தண்டில் சிறு புண்கள் இருந்தாலும், சமீபகால ஆய்வின் படி உடலின் வெப்பநிலை சமநிலையில்லாத போதும் கொட்டாவி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிலர் தடுக்கிவிழுந்தால் கூட மாத்திரைகளின் தயவோடு வாழவிரும்புவார்கள். மாத்திரைகளின் சோர்வினால் கூட கொட்டாவி உண்டாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த கொட்டாவி விடுபவர்களால் பக்கத்தில் உற்சாகமாக இருப்பவர்களுக்கும் தொற்று நோய் போல் உண்டாக்கி அவர்களுக்கும் கொட்டாவியை உண்டு பண்ணுகிறது. இயல்பாக எப்போதாவது வரும் கொட்டாவி பாதிப்பில்லை. ஆனால் வாயை பெரிதாக பிளந்து சத்தத்தோடு கூடிய கொட்டாவி தொடர்ந்து அடிக்கடி வந்தால் அது உடல் உறுப்புகளில் ஏதேனும் பிரச்னையா என்று பரிசோதித்துக்கொள்வது நல்லது.