அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த மாகாணத்தில் உள்ள மெக்கால் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கிரிகோரி. இவர் தன்னிடம் இருந்த ஒற்றை எஞ்சின் விமானத்தை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் ஒரு பயணம் மேற்கொண்டார். அவரது விமானம் சீராக சென்று கொண்டிருக்க திடீரென்று எஞ்சினில் இருந்து ஒரு சத்தம் எழுந்துள்ளது.
எஞ்சின் பழுதானதை அறிந்த ஜான் கிரிகோரி, செய்வதறியாமல் அச்சத்தில் உறைந்து போனார். உயரமான மரங்கள் இருந்த இடத்தை நோக்கி விமானத்தை கஷ்டப்பட்டு அவர் இயக்கினார். சரியாக, மரங்கள் இருந்த பகுதிக்கு அந்த விமானம் வரவே விதியின் வசம் தனது உயிரை ஒப்படைத்துவிட்டு விமானத்தை நிறுத்தினார். அப்போது அந்த விமானம் ஆனது மரத்தின் உச்சியில் விழுந்து சிக்கிக்கொண்ட படி நின்று கொண்டது.
தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்ற கதை போல், வானத்தில் ஊசலாடி அவரது உயிர் அப்போது மரத்தில் ஊசலாடியது. உடனடியாக 911 என்ற உதவி எண்ணுக்கு வேகமாக அழைப்பு விடுக்கவே மீட்பு படையினரும் அங்கு சென்று சேர்ந்தனர். அவரது நிலையைக் கண்டு ஒரு குணம் சிரிப்பும் ஒரு புறம் ஆச்சரியமும் அடைந்த மீட்பு படையினர் மரத்தின் மீது ஏறி ஜான் கிரிகோரி ஐ மீட்டனர். ஆனால் அந்த விமானத்தை எப்படி மீட்பது என்பதுதான் அதிகாரிகளை குழம்ப செய்யும் விஷயமாக இருந்தது.