உங்கள் புரத உட்கொள்ளலை அதிகரிக்கவும்.
புரதத்துடன் நிரம்பிய ஒரு ஆரோக்கியமான உணவு உங்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் மற்றும் கடுமையான சளியை ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளைத் அண்டவிடாமல் தடுக்கும். இது தவிர, சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்ற வைட்டமின் சி நிரம்பிய உணவுப் பொருட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
சளியால் பாதிக்கப்படும்போது ஈரமான சாக்ஸ் அணிவது உண்மையில் உதவும். ஈரமாக இருந்தால் சளி அதிகமாகும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனா்ல உடல் வெப்பம் அதிகரித்தால் தான் சளி பிடிக்கும். ஈர சக்ஸ் அணிந்தால் உடல் வெப்பம் தணியும். படுக்கைக்குச் செல்லும்போது ஈரமான சாக்ஸ் அணிவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நீர் சிகிச்சை மருத்துவமுறை போன்ற விளைவை ஏற்படுத்தும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு ஜோடி சாக்ஸை குளிர்ந்த நீரில் ஊறவைத்து, அதைப் போட்டு, பின்னர் அதன்மேல் ஒரு கம்பளி சாக்ஸை அணியவும். இவ்வாறு மறுநாள் காலையில் உங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
உங்களுக்கு தொண்டை புண் இருக்கும்போது ஒரு கப் சூடான தேநீர் பருகுவது சிறந்த தேர்வாகும். பெரும்பாலான மக்கள் இஞ்சி தேநீரைத் தேர்வு செய்கிறார்கள், ஆனால் கடுமையான சளியை வேகமாக போக்க க்ரீன் டீ, பிளாக் டீ, அல்லது வெள்ளை தேநீர்(வைட் டீ) ஒரு சிறந்த தேர்வாகும். க்ரீன், பிளாக், அல்லது வெள்ளை தேநீரில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை உங்கள் உடலுக்கு சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகின்றன. நீங்கள் விருப்பப்பட்டால், உங்கள் தேநீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.