கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு…
இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்….
மீனவர்களுக்கான எச்சரிக்கை : வங்ககடலில் ஏற்பட்டுள்ள தொலைத்தூர சலனங்களால் இன்று காலை முதல் நாளை இரவு வரை வழக்கத்தை விட 2 மீட்டர் கடல் அலைகள் உயர்ந்து காணப்படும்….
இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் மீனவர்கள் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தல் – சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ….
கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழை எங்கும் பதிவாக வில்லை,சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக இருக்கும்,
அதிகப்பட்ச வெப்பநிலையாக 33டிகிரி செல்சியஸ்,குறைந்தபட்ச வெப்பநிலையாக 25டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்….