உத்தரபிரதேசத்தில் வகுப்பறையில் புகுந்து சிறுத்தை மாணவனை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள சவுத்ரி நிஹால் சிங் இண்டர் கல்லூரியில் சிறுத்தை ஒன்று வகுப்பறைக்குள் புகுந்தது.
பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்தது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியதோடு, வளாகத்தில் பலரும் சிதறி ஓடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது சிறுத்தையை பார்த்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். அப்போது மாணவன் ஒருவரை ஆக்ரோஷத்துடன் தாக்கியது. இதில், காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
#watch: A student of class X was attacked by a #leopard while he was entering his class at Chaudhary Nihal Singh inter college in #Aligarh’s Chharra area around 8:30 am today. The student has been sent to a hospital for treatment. Rescue operation in on. pic.twitter.com/za1Iee7fSJ
— Anuja Jaiswal (@AnujaJaiswalTOI) December 1, 2021
இச்சம்பவம், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வகுப்பறையில் சிறுத்தைப்புலி உலாவரும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Another video : leopard sitting inside the classroom. #Aligarh pic.twitter.com/dH5t7CcRMM
— Anuja Jaiswal (@AnujaJaiswalTOI) December 1, 2021
நான் வகுப்பில் அமர்ந்திருந்த இடத்தில் சிறுத்தை இருந்தது. “நான் எழுந்தவுடன், சிறுத்தை என்னை தாக்கி, என் கை மற்றும் முதுகில் கடித்தது,” என்று சிறுத்தையை அடித்த மாணவர் லக்கி ராஜ் சிங் கூறினார். சிறு காயங்களுக்கு உள்ளான அவர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.