நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா அதிகாரி ஒருவர் பெண்ணை திட்டிய வைரல் வீடியோவை டிவி நிக்ழ்ச்சி தொகுப்பாளர் சிமி கரேவால் பகிர்ந்துள்ளார்.
புதன்கிழமை (டிசம்பர் 1) சிமி கரேவால் டுவீட் செய்த வீடியோ 1,35, 500 க்கும் மேற்பட்டவர்கள் பார்த்து உள்ளனர். மேலும் கிட்டத்தட்ட 2,500 ரீட்வீட்களுடன் வைரலாகியுள்ளது.
சமீபத்தில் தனது தந்தையை இழந்த பெண் ஒருவர், இந்தியாவுக்கான விசா ஏன் மறுக்கப்படுகிறது என்று நியூயார்க் இந்திய துணைத் தூதரக அதிகாரியிடம் கேட்கிறார்.
ஆனால் அதிகாரி அவர்து ஆவணங்களையும் பணத்தையும் திருப்பிக் கொடுத்து கோபமாக அவரை பார்த்து வெளியேறுமாறு கத்தினார். அவருக்கு விசா வழங்க முடியாது என்றும் அவர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்து உள்ள சிமி கரேவால் கிளிப்பைப் ப 24/11/2021 அன்று. ஒரு பெண்ணுடைய தந்தை இறந்துவிட்டார், அவருக்கு இந்தியாவுக்கு வர விசா தேவைப்பட்டது.
இது நியூயார்க் தூதரகத்தில் உள்ள இந்திய அதிகாரி ஒருவரின் அருவருப்பான நடத்தை. என பிரதமர் மோடி அலுவலகம் ,மத்திய மந்திரி ஜெயசங்கர் ஆகியோர் டுவிட்டரை குறிப்பிட்டு இதை நீங்கள் புறக்கணிக்க முடியாது என கூறி உள்ளார்.
அதிகாரிகளின் நடத்தை குறித்து ஏராளமான புகார்கள் உள்ளன, என்று சிமி கரேவால் மற்றொரு டிவீட்டில் கூறி உள்ளார்.
On 24/11/2021. Indian embassy New York. Her father had died & she wanted a visa for India. This is the obnoxious behavior of an Indian officer in the New York Consulate towards her. @DrSJaishankar @MEAIndia @PMOIndia you can’t ignore this. pic.twitter.com/7ckWXnJqP0
— Simi Garewal (@Simi_Garewal) November 30, 2021