ரோட்ரேக்ட் கிளப் ஆப் அம்பத்தூர் மற்றும் எஸ்ஆர்எம் வடபழனி இணைந்து ஷேவ் சக்தி அமைப்பு சார்பில் பெண்கள் தின விழா கொண்டாட்டம் சென்னைஅரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி வைஷ்ணவ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வெறும் 5 ரூபாய்க்கு எளிய முறையில் பெற்றுக்கொண்டு பயன்பெறும் வகையில் புதிய நாப்கின் பெறும் இயந்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு இந்த நாப்கின் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்தார். இதில் மேடையில் பேசிய வரலட்சுமி சரத்குமார் இதே போல் “சேவ் சக்தி” என்ற தங்களுடைய அமைப்பின் சார்பிலும் 20 க்கும் அதிகமான பள்ளிகளில் இது போன்ற நாப்கின் இந்திரத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வரலட்சுமி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் இது போன்ற நாப்கின்கள் கிடைக்கும் என்றால் அது பெண்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்,சில ஆண்டுகளுக்கு முன்னர் மாதவிடாய் காலங்களில் பள்ளி கல்லூரிக்கு அனுப்புவதற்கு கூட பெற்றோர் தயக்கம் காட்டினார்கள்,
ஆனால் இன்று நிலை முற்றிலும் மாறி உள்ளது. நாப்கின்கள் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்,பயன்பாடு அதிகரிக்கும். சமூக வலைதளங்கலால் இன்றைய காலகட்டத்தில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்பதால் அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.
நான் நன்கு அனுபவம் பெற்ற பின்னர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன், அதற்கான காலம் நேரம் வரும் போது கண்டிப்பாக தெளிவான மன நிலையில் மக்கள் பணி ஆற்றுவேன்.