நாலைந்து வெண்டைக்காயை எடுத்து நன்கு சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். காயின் காம்பை மட்டும் நீக்கினால் போதும். வெட்டி வைத்த வெண்டைக்காயை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தண்ணீர் எதுவும் அரைக்கும்போது சேர்க்கத் தேவையில்லை. இந்த அரைத்த கலயை ஒரு சுத்தமான பௌலிற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
இந்த அரைத்த வெண்டைக்காய் கலவையுடன் அரை ஸ்பூன் அளவுக்கு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையிரண்டையும் நன்கு கலந்து கொள்ளுங்கள். அரைத்து வைத்த பேஸ்பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கை, கால்களிலும் அப்ளை செய்யலாம். அரை மணி நேரம் அப்படியே உலரவிட்டு, பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ வேண்டும்.
இதில் உள்ள வைட்டமின் சி உங்களுடைய சருமத்தில் உள்ள சேதங்களையும் அழுக்குகளையும் முற்றிலுமாக நீக்கிவிடும். அதோடு உங்களுடைய சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கச் செய்து கலராக்கும்.