இவர் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து போண்டா மணி ஒரு முறை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்பது கிட்டத்தட்ட சினிமா ஆள்கள் எல்லோருக்குமே தெரியும். என்னுடைய கதை பெரிய கதை. நான் இன்றைக்கு உ யிரோ டு இருக்கிறதே கடவுள் பு ண்ணியம் தான்.
எனக்கு காலில் அடிபட்டப்போவே இ றந்திருக்க வேண்டியவன். இலங்கையில் மளிகைக் கடை நடத்தி வந்தார் என் அப்பா. எங்க குடும்பத்துல என்னையும் சேர்த்து மொத்தம் 16 பிள்ளைகள். அதில் ஒருத்தர் கு ண்டடிபட்டு இ றந்துட்டார். 5 பேர் படகில் போகும் போது அலை இ ழுத்துக் கிட்டு கடல்ல கூட்டிக்கிட்டு போயிடுச்சு. ஒருசிலர் மட்டும் தான் மிஞ்சினோம்.
என்னை ஒருமுறை சுட்டதில் என் இடது காலில் கு ண்டு து ளைத்தது. பிறகு சிங்கப்பூர் போயிட்டேன், அங்கே ஒரு கடையில சேல்ஸ்மேனா வேலை பார்த்தேன். அங்கே ஷூட்டிங்க்காக வந்திருந்த பாக்யராஜ் சாரை சந்தித்தேன்.
பிறகு தமிழகம் வந்தேன். மீண்டும் பாக்யராஜை சந்தித்த பிறகு தான் எனக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார். கலைஞர் ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களும் எனக்கு நல்லது பண்ணியிருக்கிறார்கள். கலைஞர் என்னை ஊக்கப்படுத்தினார்.
ஜெயலலிதா கட்சியின் உறுப்பினராக்கி, ஜெயா டி.வியில் நிகழ்ச்சி செய்யச் சொன்னார். ஆனால் இதுவரை எனக்கு எந்த விதமான குடியிருப்புச் சான்றோ, வாக்காளர் அட்டையோ, வீடோ கிடைக்கவில்லை என கூறியிருந்தார்.